ரஜினி யார்.. எம்எல்ஏவா, கட்சி தலைவரா? சேட்டைகளை சினிமாவோடு நிறுத்திக்கணும்.. தா.பாண்டியன் தாக்கு
ரஜினியை தா.பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார்
மதுரை: முதல்ல, இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் இருக்குன்னு ரஜினிகாந்த்துக்கு தெரியுமா? குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லைன்னு சொல்ல இவர் யாரு? எம்எம்ஏவா? கட்சி தலைவரா? ஒன்னும் இல்லை.. ஒரு நடிகர்.. அந்த நடிப்போடு அவர் நிறுத்தி கொள்வது நல்லது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தின் மிக சிறந்த பேச்சாளர்களில் ஒருவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பாஜக ஆட்சியை சரமாரி தாக்கினார்.. அக்கட்சிக்கு வக்காலத்து வாங்கி வரும் ரஜினியை பகிரங்கமாகவே விமர்சித்தார். அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி
"பிரதமர் மோடி மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாட்டின் நிலைமை ரொம்பவும் மோசமாகி வருகிறது.. முதல்ல, இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன.. அவற்றிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது இப்படி எந்த விவரமும் நடிகர் ரஜினிகாந்திற்கு தெரியாது.. ஆனால், சிஏஏவினால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு வராது என்று மட்டும் சொல்கிறாரே, அதை சொல்ல ரஜினி யார்? இது குறித்து ரஜினி குரல் கூட கொடுக்கவே வேண்டாம்.

பட்ஜெட்
இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை என்று சொல்ல இவர் யார்? சட்டமன்ற உறுப்பினரா? கட்சியின் தலைவரா? அவர் ஒரு நடிகர் அவ்வளவு தான் அவர் நடிப்போடு நிறுத்திக் கொள்வது தான் நல்லது... இந்தியாவில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றது.. எத்தனை மாநிலங்கள் இருக்கின்றன.. இந்தியாவின் முதல் பட்ஜெட்டில் எவ்வளவு பணம்? இதையெல்லாம் அவரை சொல்ல சொல்லுங்களேன் பார்க்கலாம்?

அபிஷேகம்
யார் யாரை வந்து ஏமாத்துறது? ஏதோ இவர் திரையில் செய்கிற சேட்டைகளை பார்த்து அவர் சினிமாவுலகில் வேண்டுமானால் முதலிடம் பிடித்திருக்கலாம். அவருக்கு பாலாபிஷேகம் செய்யட்டும்.. விமர்சையாக நடக்கட்டும்.. ஏன் வாழைப்பழ அபிஷேகம் கூட நடக்கட்டும் அரசியல் பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை... இப்பொழுது வந்து இஸ்லாமியர்களுக்கு என்றால் முதலில் குரல் கொடுப்பேன் சொல்கிறார்..

வைரல்
எங்களை பாதுகாத்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும்... எங்களுக்குப் பாடம் சொல்லித்தர அவர் அவராகவே தம்மை ஆசிரியராக நியமிக்க வேண்டாம்... உங்களுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்று எங்களுக்கும் தெரியும்" என்று தா.பாண்டியன் சற்று காட்டமாக கூறினார். தா.பாண்டியன் ரஜினியை கடுமையாக சாடிய இந்த பேச்சுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications