ஒரு தமிழர் கூட இல்லையே.. சு.வெங்கடேசன் எம்.பி. கேட்டதுமே.. உடனே தேர்வை நிறுத்தி வைத்த மத்திய அரசு
மதுரை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல்வர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 784 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் குரல் எழுப்பியிருந்த நிலையில் தற்போது இந்த நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 1,252 கேந்திரய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பள்ளியில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளுக்கு அதிக முக்கியத்துவமும் அதனை கடந்து பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவமும் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று பிரச்னை எழுந்தது.

இப்படி இருக்கையில் தற்போது மற்றொரு பிரச்னையும் எழுந்தது. அதாவது கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் பொறுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெற்றன. இதில் விண்ணப்பித்தவர்களுக்கு நேரடி நியமன முறையில் தேர்வு நடைபெறும். இந்த நேர்காணலுக்கு 784 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் ஒரேயொரு தமிழர் கூட அழைக்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதாவது, "கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 & 173 பேர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி. அதிர்ச்சி தருவது. நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது. தேர்வுப் பட்டியலில் தென்படும் இன்னொரு பிரச்சினை. "மெரிட்" எனும் வகையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேர் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி என்ற விவரங்கள் இல்லை.
"மெரிட்" டில் வரக் கூடிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரை இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் சரிக் கட்டக் கூடாது என்ற நெறிகள் மீறப்பட்டுள்ளனவா என்ற கேள்வி எழுகிறது. பெயர்களை வைத்து சமூக அடையாளம் அறியும் சூழ்நிலை இந்திய சமுகத்தில் உள்ளது துரதிருஷ்டம். ஆனாலும் இங்கு அதுவே பாரபட்சத்தை வெளிக் கொண்டும் வருகிறது. முதல்வர் பதவிக்கு நேர்காணல் அழைக்கப்பட்ட பழங்குடியினர் 58 பேரில் 28 "மீனா"க்கள் உள்ளனர். ஆனால் 327 பொதுப் பட்டியல் (UR) தேர்வர்களில் ஒரு "மீனா" கூட இல்லை.

இது அப்பட்டமாக தெரிகிற ஒரு உதாரணமே. வெளிப்படையான பட்டியல் ஆக இது இல்லை. எத்தனை ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி தேர்வர்கள் பொதுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பதை கேந்திரிய வித்யாலயா சங்காதன் தெரிவிக்க வேண்டும். ஆகவே கேந்திரிய வித்யாலயா இந்த நியமனங்களை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு பின்னரே இறுதி தேர்வுப் பட்டியலை வெளியிட வேண்டும். தமிழர்களுக்கும், ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கும் அநீதி இழைக்கப்படாமல் உறுதி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதமும் எழுதியிருந்தார். இந்நிலையில் ஜோத்பூர் தீர்ப்பாயம் தலையீட்டில் (CAT) நேர்காணல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications