Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகப்கோப்பை கிரிக்கெட்.. தொடரட்டும் இந்தியாவின் வெற்றி.. மதுரையில் சிறப்பு பூஜைகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் வெல்லவும் இறுதிப் போட்டியில் வென்று இந்தியா கோப்பையை வெல்லவும் மதுரையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து காஞ்சி ஸ்ரீமகாபெரியவா கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நடந்து வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரையில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது.

Cricket World Cup 2023: Madurai people are praying for the victory of team India in the semi finals

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இன்று நடைபெறும் அரை இறுதி போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவும், நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.

இதற்கு அடுத்த போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இவ்விரு போட்டிகளிலும் வெல்லும் அணிகள் பைனலில் மோதும்.

Cricket World Cup 2023: Madurai people are praying for the victory of team India in the semi finals

இதுவரையிலும் பங்கேற்ற 9 லீக் போட்டிகளிலும் வென்று புதிய சாதனை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த வெற்றி தொடர வேண்டும் என்பதை பிரதான பிரார்த்தனையாக வைத்து, மதுரை காஞ்சி மகா பெரியவா கிருஹத்தில் இந்த விசேஷ பூஜை நடத்தப்பட்டது. நேற்று மகா பெரியவரின் அனுஷ நட்சத்திர நாள் என்பதால், மகா பெரியவரின் விக்ரகம் மற்றும் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரனை நடைபெற்றது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து எஸ்.எஸ்., காலனியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீமகாபெரியவா கோவிலில் சிறப்பு பூஜைகளை செய்தனர். முன்னதாக மஹன்யாஸம், ஹோமம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, கோப்பையை வெல்ல வேண்டும் என சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Cricket World Cup 2023: Madurai people are praying for the victory of team India in the semi finals

அப்போது, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ இடம் பெற்ற பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட அட்டைகள் தனித்தனியே கொடுக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் மற்றும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் நெல்லை பாலு, சங்க செயலாளர் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன், பொருளாளர் கதிரவன், பட்டய உறுப்பினர்கள் சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ கருப்பையா, அத்வி மீடியா ஆதவன், மருத்துவர் புகழேந்தி, சுப்பிரமணியன், ராஜ்குமார் உட்பட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Cricket World Cup 2023: Madurai people are praying for the victory of team India in the semi finals
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+