மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி புயலால் திமுகவுக்கு பாதிப்பு: அமைச்சர் உதயகுமார்
மதுரை: மதுரையில் மையம் கொண்டிருக்கும் மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு என மக்கள் பேசிக் கொள்வதாக தமிழக அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புரேவி புயல் இலங்கையில் கரையை கடப்பதாக தகவல் வந்துள்ளது, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தயார் நிலையில் அரசு
புரேவி புயலை எதிர்க்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழக அரசு எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயல்கள் வருவதற்கு முன்னரே முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர். புயலால் உயிர் மற்றும் பொருட்கள் சேதம் இல்லாமல் புயலை எதிர்க்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரைக்கு குடிநீர்
கஜா புயலில் 1 லட்சம் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர், நிவர் புயலில் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர். ரூ 1,295 கோடி மதிப்பில் முல்லை பெரியாறு ஆற்றில் இருந்து குடிநீர் திட்டத்தை டிச 4-ந் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

உன்னிப்பாக கவனிக்கிறோம்
புதிய திட்டத்தால் 50 ஆண்டுகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படும், 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை மதுரைக்கு 3 ஆண்டுகளில் முதல்வர் வழங்கி உள்ளார், புரேவி புயலின் வீரியத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

திமுகவும் அழகிரி புயலும்
புயலின் நிலையை கண்காணித்த பிறகு தான் விடுமுறை குறித்த அறிவிப்பு கொடுக்க முடியும். திமுகவில் ஒரு பூகம்பம் உருவாகும், பூகம்பம் வலுபெறுமா? வலுபெறாதா? என தெரியவில்லை. மதுரையில் மையம் கொண்டுள்ள மு.க.அழகிரி என்கிற புயலால் திமுகவுக்கு பாதிப்பு உண்டாகும் என மக்கள் பேசுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications