திமுக ஆசையை அதிமுக நிறைவேற்றும்.. கட்சிக்குள் யாரை சேர்ப்பது? எடப்பாடி தான் எல்லாமே.. தங்கமணி பளீஸ்
மதுரை: அதிமுகவில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை, தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
மதுரை மாநகராட்சி குடிநீர் திட்டத்தை முடக்குவதாகவும் சாலைகளை சீரமைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்தை தாமதப்படுத்துவதாகவும், கனிம வளம் கடத்தப்படுவதாகவும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள், 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய முன்னாள் அமைச்சர் தங்கமணி,” நகை கடன் தள்ளுபடி என கூறினார்கள் ஆனால் 35 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்குதான் தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்த மாட்டோம் எனக் கூறினார்கள். 52% மின்கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். இந்த அரசின் இரண்டு சாதனைகள் இன்று கள்ளச்சாராயம்.
அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில் ஒருவர் கூட இறக்கவில்லை. திமுக ஆட்சியில் முதலில் நடைபெற்ற கள்ளச்சாராயம் போது 10லட்சம் கொடுத்துவிட்டு இனிமேல் தமிழகத்தில் ஒரு கள்ளச்சாராய சாவு கூட நடக்காது என்று கூறினார். ஒரு ஆண்டு கழித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் நிலையம் அருகே நீதிமன்றத்திற்கு பின்பு 67 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்து விட்டார்கள்.
மற்றொரு சாதனை தமிழகமே போதை பொருளால் மிதந்து கொண்டிருக்கிறது. காவல்துறையால் ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஒரு 15 வயது மாணவன் கூட போதைக்கு அடிமையாகி காவலரை தாக்கக்கூடிய காட்சிகளை நாம் பார்க்கின்றோம். 1980 இல் பாராளுமன்ற தேர்தலின் போது இரண்டு தொகுதியில் தான் வெற்றி பெற்றோம். கலைஞர் இந்திரா காந்தியிடம் சொல்லி ஆட்சியை கலைத்தார்.
அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தல் என்பது ஒவ்வொரு தொகுதியாக சென்று செய்தேன் என்று புரட்சித்தலைவர் மக்களிடம் பேசினார். அந்த தேர்தலின் முடிவில் அதற்கு முந்தைய தேர்தலை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றோம் அதே போல வருகின்ற தேர்தலிலும் நடக்கும்” எனக் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கமணி கூறுகையில்,” 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல்வர் கூறுகிறார். அதை முதல்வரின் ஆசை ஆனால் அதை நிறைவேற்ற போவது அதிமுக தான். கட்சிப் பிரிந்துள்ள நிலையில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்கிறீர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆறு சதவீத வாக்குகள் குறைந்து இருக்கிறது.
அடுத்த சட்டமன்ற தேர்தலில் இன்னும் ஆறு சதவீதம் குறையும் அந்த 12 சதவீதம் எங்களுக்கு வரும். கட்சியில் யாரையும் சேர்க்க முடியாது என்று நான் சொல்லவில்லை தேர்தல் நேரத்தில் யாரை சேர்ப்பது என்று பொதுச் செயலாளர் முடிவெடுப்பார். மக்களின் முக மலர்ச்சியை இந்த ஆட்சிக்கு சாட்சி என முதல்வர் கூறியுள்ளார். பின் எதற்காக ஆறு சதவீத வாக்கு குறைந்தது. எடப்பாடியாரின் அரசுதான் மக்களுக்கான அரசு” என தனது பேட்டியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.
-
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications