தனுஷ் அரசியலுக்கு வர தீவிரமா இருக்காரே? குறை சொல்லாதீங்க.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்சன்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: விஜய்க்கு எப்படி ஜாக்பாட் அடித்ததோ அதேபோல் தனக்கும் ஜாக்பாட் அடிக்கும் என தனுஷ் நம்புகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தனுஷை குறை சொல்வது பொருத்தமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக நடிகர் தனுஷ் நற்பணி இயக்க கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறார். ஏற்கனவே தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க உத்தரவிட்ட தனுஷ், பின்னர் மாவட்ட வாரியாக ரசிகர்கள் சந்திப்பை நடத்தி வருகிறார். திடீரென டெல்லிக்கு சென்று 2 நாட்கள் முகாமிட்ட தனுஷ், பாஜகவின் முக்கிய புள்ளிகளை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

Dhanush

இதனிடையே தனுஷ் மத்திய அமைச்சராகிறார் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன. டெல்லியில் இருந்து வந்த பின் தனுஷ், மகளிரணி நிர்வாகிகளை சந்தித்தார். மகளிருக்கு வெள்ளி காமாட்சி விளக்கை பரிசாக கொடுத்த தனுஷ், அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை தனுஷ் கேட்டதால், பொறித்ததாக நகைக்கடை நிறுவனம் விளக்கம் அளித்தது.

இதனால் பாஜக ஆதரவுடன் தனுஷ் அரசியலுக்கு வருகிறாரோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தனுஷை அதிமுகவில் இணைக்கும் முயற்சிகளும் நடப்பதாக பேச்சுகள் வருகின்றன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரடியாகவே அதிமுக தனுஷை நாடி செல்லலாம் என்று கூறி இருந்தார்.

அதேபோல் தனுஷின் அரசியல் வருகையை தவெக ரசிக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி மரிய வில்சன், பிரபு, ராஜ்மோகன், விஜய் பாலாஜி உள்ளிட்ட பலரும் விமர்சித்து வருகின்றனர். தனுஷை விமர்சித்து தவெகவும் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் தனுஷ் அரசியல் வருகை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு.. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். கட்சி தொடங்குவதை எப்படி தவறு என்று சொல்ல முடியும். திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ரசிகர்கள் இருக்கிறார்கள்.. எப்படி விஜய்க்கு ஜாக்பாட் அடித்ததோ, அதுபோல் தனக்கும் ஜாக்பாட் அடிக்கும் என தனுஷ் நம்புகிறார். அதனால் ஒருவரை குறை சொல்வது பொருத்தமாக இருக்காது என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+