ராணிப்பேட்டை டாஸ்மாக் கடையில் ரூ.60 கூடுதல் வசூல்.. ரூ.1 கோடி உத்தரவு! அரசுக்கு வேலூர் கோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பீர் பாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக வசூலித்திருக்கிறார்கள்.. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் அதை தட்டிக்கேட்டுள்ளார்.. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. கடைசியில் இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றுவிட்டது.. இதையடுத்து வேலூர் நுகர்வோர் நீதிமன்றம் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் என்ன தெரியுமா?

ராணிப்பேட்டை ஸ்கடர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (28). இவர் கடந்த மார்ச் 28-ம் தேதி, ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு தலா ரூ.170 விலையுள்ள 3 பீர் பாட்டில்களை வாங்கியுள்ளார்.

TASMAC

ராணிப்பேட்டை டாஸ்மாக்

3 பாட்டில்களுக்கும் சேர்த்து ரூ.510 கொடுத்தால் போதும்... ஆனால், அவரிடம் ரூ.570 வசூலிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பீர் பாட்டிலுக்கும் ரூ.20 வீதம் மொத்தம் ரூ.60 கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல், எதுக்காக கூடுதல் பணம் வசூலிக்கிறீர்கள் என்று விற்பனையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் விலை வசூலித்த கடை ஊழியர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த மே 12-ம் தேதி வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வேலூர் கோர்ட் அதிரடி

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி மீனாட்சிசுந்தரம், இறுதி விசாரணைக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளார். அதில், "நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாகப் பணம் வசூலித்த சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடையில் பணியாற்றிய விற்பனையாளர் மற்றும் டாஸ்மாக் கோட்ட மேலாளர் ஆகிய இருவரும் இணைந்து ரூ.1 கோடியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

சக்திவேலுக்கு இழப்பீடாக 4000

அதேபோல், பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு இழப்பீடாக ரூ.3,000, வழக்குச் செலவாக ரூ.1,000 என மொத்தம் ரூ.4,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதுமட்டுமல்ல, ராணிப்பேட்டை டாஸ்மாக் கோட்ட மேலாளரும், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளரும் இணைந்து ரூ.1 கோடியைத் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட சக்திவேலுக்கு இழப்பீடாக ரூ.3,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.1,000 வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

6 மாதங்களில் 200 கேஸ்கள்

60 ரூபாய் கூடுதலாக இழந்த சக்திவேலுக்கு மொத்தம் ரூ.4,000 வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

ஏற்கனவே வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இது தொடர்பாக கடந்த 6 மாதங்களில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுவதும் கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+