Dhaunsh: 234 தொகுதிகளுக்கும் குறி! மாணவர்களுக்கு ஏசி டியூஷன் மையங்களை தொடங்கும் தனுஷ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷின் நற்பணி மன்றம் சார்பில், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் புதிய ஏசி வசதி செய்யப்பட்ட இலவச டியூஷன் சென்டர்களை தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மக்களின் ஆதரவு யாருக்கோ அவர்களால் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். அந்த வகையில் கிட்டதட்ட 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து வந்த நிலையில் திடீரென புது வரவான தவெக ஓவர்டேக் செய்து ஆட்சியை பிடித்தது.

முதல்வராக பொறுப்பேற்ற விஜய், அவரது வாழ்நாள் முழுவதும் அவரே முதல்வர் என தவெகவினர் கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் அவரை பிரதமர் இடத்திலும் வைத்து பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

Dhanush

அரசியலில் தனுஷ்

இந்த நிலையில் தற்போது தனுஷ் புதிதாக கட்சித் தொடங்க போகிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன. அதிலும் அவர் கட்சியின் பெயர் தமிழக எழுச்சிக் கழகம் என சொல்லப்படுகிறது. இவரது டார்கெட் 2031 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தல் என சொல்லப்படுகிறது.

வலுப்படுத்தும் தனுஷ்

தேர்தலுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் தற்போது அவர் தனது கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்தவும், பொதுமக்களின் ஆதரவை பெறுவதிலும் மும்முரம் காட்டி வருகிறார்.

டியூசன் சென்டர்

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், ரத்ததான முகாம் உள்ளிட்டவைகளுக்கு மத்தியில் தனுஷ் புதியதொரு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். அதுதான் கல்வி! தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஏசி மற்றும் நவீன வசதிகள் கொண்ட டியூசன் சென்டர்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

ஒரு மையத்திற்கு 3 ஆசிரியர்கள், ஒரு உதவியாளர் நியமிக்கப்படவுள்ளனராம். இவர்களுக்கான ஊதியம், மையத்திற்கான வாடகை, மின்சாரம் உள்ளிட்ட செலவுகளை தனுஷ் நற்பணி இயக்கமே பார்த்துக் கொள்ளுமாம்.

10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு

முதற்கட்டமாக இந்த மையங்கள் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கப்படுகிறதாம். அதன் பின்னர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 234 தொகுதிகளிலும் டியூஷன் சென்டர்கள் பயன்பாட்டுக்கு வருகிறதாம். பொதுத் தேர்வு எழுதும் 10-ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மையங்களில் முதற்கட்டமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளதாம்.

வருவாரா மாட்டாரா?

கடந்த சில மாதங்களாக தனுஷ் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்து வந்த நிலையில் அவரது அடுத்த கட்ட நகர்வுகளை பார்க்கும் போது அவர் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாகவே சொல்லப்படுகிறது.

மேலும் அவர் எந்த மாதிரியான வியூகங்களை வைத்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனுஷ் நற்பணி இயக்கத்தின் கொடி சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் தனுஷ் அரசியல் கட்சி தொடங்குவதற்கான முதற்கட்டம் என பேசப்பட்டது. ஆனால் இதை நற்பணி இயக்கத் தலைவர் மறுத்தார். அந்த கொடி ஏற்கெனவே இருந்ததுதான், ரசிகர்கள் கார்களில் பொருத்தி கொள்ள விரும்பியதால் அது தற்போது வைரலானது என நற்பணி இயக்க தலைவர் மறுத்திருந்தார்.

பாஜகவில் ஐக்கியமா?

எனினும் அண்மையில் மகளிரணியினரை சந்தித்த போது காமாட்சி அம்மன் விளக்கின் அடிபுறத்தில் தாமரை சின்னத்தை வலுக்கட்டாயமாக பதித்திருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் பாஜகவில் இணைந்து அரசியல் செய்ய போகிறாரா, பாஜகவின் தமிழக முதல்வர் வேட்பாளராகிறாரா தனுஷ் என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. இல்லை அவர் தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிக்க போகிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விஜய்யும் டியூஷன் சென்டர் ஆரம்பித்தாரே!

இதே போல் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "விஜய் விலையில்லா பயிலகம்" என்ற பெயரில் இலவச மாலை நேர டியூஷன்கள் நடத்தப்படுவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவை தற்போது செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+