விபத்தில் உயிரிழந்த பேரையூர் ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் தானம்...3 பேருக்கு மறுவாழ்வு
விபத்தில் உயிரிழந்த பின்னரும் உடல் உறுப்பு தானத்தால் பேரையூர் ராணுவ வீரர் 3 பேருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளார்.
மதுரை: வாகன விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் உறுப்புகள் மூன்று பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. உயிரிழந்த பின்னரும் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் ராணுவ வீரர்.
உயிரிழந்தும் பிறருக்கு வாழ்வு அளித்த ராணுவ வீரரின் பெயர் முரளி மனோகரன். வயது 29. இவர் பேரையூரைச் சேர்ந்த சின்னமருது என்பவரின் மகனாவார். இவர் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 1ஆம் தேதி மதுராவில் பணி முடிந்து முரளி மனோகரன் மோட்டார் சைக்கிளில் குடியிருப்புக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே மாடு சென்றது.

தூக்கி வீசப்பட்ட ராணுவ வீரர்
மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திடீரென பிரேக் பிடித்தார். இதில் நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ராணுவ மருத்தவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

உடல் உறுப்புகள் தானம்
இதையடுத்து அவரது உடல் பாகங்களான கண்கள், இதயம், கல்லீரல் ஆகியவை அவரது மனைவியின் ஒப்புதலோடு தானம் செய்யப்பட்டது. அவை ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படுபவர்களுக்கு உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும். இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.

சொந்த ஊரில் உடல்
இதையடுத்து அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பேரையூருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்கள் கண்ணீர்
கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் இவருக்கு கவுசல்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. விபத்தில் பலியான கணவரின் உடலை பார்த்து அவரது மனைவி, உறவினர்கள் கதறி அழுதது பார்க்க சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடல் பேரையூரில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications