Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலத்திற்கு ஏற்ப வாக்குக்கு பணம் பட்டுவாடா நடைபெறுகிறது - இயக்குனர் அமீர்

Subscribe to Oneindia Tamil

மதுரை: காலத்திற்கு ஏற்ப வாக்குக்கு பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என இயக்குனர் அமீர் தெரிவித்தார்.

மதுரை தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஒரு நாட்டின் எல்லை மீறி வரும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம் என்பது ஏற்புடையதல்ல.

அந்த வகையில் இந்திய தேசம் காக்கப் பட வேண்டும் என்பது எல்லோருடைய ஒருமித்த கருத்து. இந்தியா என்பது பல்வேறு மதங்களையும் சித்தாந்தங்களையும் பாஸ்டர்களையும் பௌத்தர்களையும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சீக்கியர்களையும் ஒன்றிணைத்துள்ள நாடு.


இரும்புக்கரம்

இரும்புக்கரம்

நம்முடைய இந்திய வரைபடத்தில் இருக்கக்கூடிய எல்லைக்கோடாக இருக்கக் கூடிய இந்த இந்திய தேசத்திற்கு ஒரு இழுக்கு ஒரு அவமானம் ஏற்படும் என்றால் நிச்சயமாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பது நியாயமானது.

கொள்கை கூட்டணி

கொள்கை கூட்டணி

இன்றைக்கு நடந்தது பாகிஸ்தான் எல்லைக்குள் ஆன இந்திய வீரர்களின் தாக்குதல் வரவேற்கத்தக்கது என்றார். பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து தினகரன் அணியில் நடிகர் ரஞ்சித் சேர்ந்திருப்பது குறித்த கேள்விக்கு தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இது தேர்தலுக்கான கூட்டணி என்றும் கொள்கை கூட்டணி என்றும் தெரிவிக்கின்றனர்.

தலைவர்கள்

தலைவர்கள்

உண்மையில் எனக்கு இது ஆச்சர்யத்தை அளிக்கிறது.,அப்படியானால் இந்த கட்சிகள் எல்லாம் யாருடைய நலனை முன்னிறுத்தி கூட்டணி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை மக்கள் தான் நமக்கான தலைவர்களை சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்றைய காலங்கள்

இன்றைய காலங்கள்

இது நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய ஒரு காட்சிதான். அன்றைய காலங்களைப் போல் இன்றைய காலங்களில் சமூக வலைதளங்கள் ஊடகங்களின் எண்ணிக்கை அதிகமானதால் மக்கள் ஒவ்வொரு விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

முடிவு

முடிவு

தமிழகத்தில் இப்போது ஏற்படுத்தக் கூடிய கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணி வைத்திருக்கக்கூடிய அனைவருமே நாளை நமதே நாளை நமதே நாற்பதும் நமதே என்று தான் கூறுவார்கள் முடிவு மக்களின் கையில்தான் இருக்கின்றது என்றார்.

விஷயம்

விஷயம்

40 தொகுதிகளின் வெற்றியும் ஒரே கட்சிக்கு கிடைக்கிறதா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு கிடைக்கிறதா என்பதை தேர்தலின் முடிவு என்பது தான் தெரியவரும். இந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு என்பது காட்சிகளை தாண்டிய ஒரு விஷயம்.

மோசமான அரசியல்

மோசமான அரசியல்

ராணுவ வீரர்களின் உயிரிழப்பை சொல்லி மாள முடியாது. கடுமையான வெயிலிலும் பனியிலும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய வாழ்க்கையை நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அப்படிப்பட்ட ராணுவ வீரர்களின் உயிர்பலியை அரசியலோடு ஒப்பிட்டுப் பார்ப்பது மிக மோசமான கேவலமான அரசியலாக நான் பார்க்கின்றேன்.

யாருக்கு தெரியும்

யாருக்கு தெரியும்

காலமாற்றத்திற்கேற்ப தற்போது வாக்குக்கு பணம் பட்டுவாடா நடைபெற்று வருகிறது. தேர்தல் விதிமுறைகளின்படி இலவச பொருட்கள் கொடுக்கக்கூடாது. விதிமுறைகள் மீறி நடந்த அவர்கள் மீதான வழக்குகள் என்ன நிலைமையில் இருக்கிறது யாருக்கு தெரியும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+