தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் 2 நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை!
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் பெருமாள் கோவில்பட்டியில் உள்ள மண்டு கருப்பண்ணசாமி கோவிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்கி தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நிலப் பிரச்சனையில் உள்ள கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார். உத்தரவை நிறைவேற்றாததால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. நேரில் ஆஜராகவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிட்டிருந்தார். அரசின் மேல்முறையீட்டில், தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் இந்து மற்றும் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. இந்த மண்டு கருப்பசாமி கோவில் முன்பு அமைந்துள்ள காலி இடத்திற்காக கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துகளிடையே பல வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தக் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என இந்து சமுதாய மக்களின் சார்பில் சித்திரபால்ராஜ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தீபம் ஏற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் பெருமாள் கோவில்பட்டி கிராமத்திற்கு மட்டும் 144 தடை உத்தரவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் பிறப்பித்தார். இதையடுத்து 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
144 தடை உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் நேரில் ஆஜராக தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில் அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், மண்டு கருப்பண்ணசாமி கோவிலை திறந்து பூஜைகள் செய்யவும், கார்த்திகை தீபத்தை ஏற்றவும் அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications