2026ல் பெண் சிங்கமாக பிரேமலதா சட்டசபைக்கு செல்வார்.. அடித்து சொல்லும் விஜய பிரபாகரன்!
மதுரை: 2006ல் விஜயகாந்த் எப்படி ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் சென்றாரோ, அதேபோல் 2026ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார் என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்த் மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து இன்னுஇம் பலரும் சட்டசபைக்கு செல்வார்கள், அதற்காக நான் உழைக்க தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், தற்போது 2ஆம் கட்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதேபோல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக நெருக்கம் காட்டி வருகிறது. பிரேமலதா விஜயகாந்த் நேரடியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீரென தமாகா நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளார் சுதீஷ் பங்கேற்று அதிர்ச்சி கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் தேமுதிக கோரிய மாநிலங்களவை இடமும் அடுத்த ஆண்டு அளிக்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய பிரபாகரன் பேசுகையில், 2006ல் விஜயகாந்த் எப்படி ஆண் சிங்கமாக சட்டசபைக்குள் சென்றாரோ, அதேபோல் 2026ல் என் அம்மா பிரேமலதா விஜயகாந்த் பெண் சிங்கமாக சட்டசபைக்குள் செல்வார். அவருடன் சேர்ந்து இன்னும் பல தேமுதிக நிர்வாகிகளும் எம்எல்ஏ-க்களும் சட்டசபைக்கு செல்வார்கள்.
அதற்கு உறுதுணையாக விஜய பிரபாகரன் 200 சதவிகிதம் உழைக்க தயாராக இருக்கிறேன். எனது சொந்த ஆசைகளை விடவும், தந்தை விஜயகாந்தின் லட்சியத்திற்காக போராடி வருகிறேன். சுயமாக ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி, சுயமாக கட்சியை தொடங்கிய கட்சி தேமுதிக. இந்தக் கட்சியை யாராலும் அசைக்க முடியாது.
இனி விஜயகாந்தையும், பிரேமலதா விஜயகாந்தையும் பார்த்திருப்பீர்கள். இனி விஜயகாந்த், பிரேமலதா இருவரை கலந்து வரும் காலத்தில் விஜய பிரபாகரனை பார்ப்பீர்கள். மடியில் கனமில்லை.. அதனால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.. இங்குள்ள ஒவ்வொரு நபரும் விஜயகாந்த் தான். விஜயகாந்தின் ஆசை, லட்சியம் எல்லாம் ஒன்றுதான். 2026ல் நிச்சயமாக முரசு வெல்லும்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்பும் சின்ன தடுமாற்றத்துடன் பயணித்து வருகிறது. அதனை சரி செய்வதற்கு நிச்சயமாக தேமுதிக தேவை. தேமுதிக இணைந்தால் மட்டுமே, அந்தக் கட்சி ஆட்சி அமைக்க முடியும். எந்தப் படை இல்லாமல், எந்தப் படையும் வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
டான்சர் ராகவா லாரன்ஸ் விஜய்யின் திருச்சி கிழக்கை குறிவைத்து.. ஆண்டிப்பட்டி ஹிஸ்டரி ரிப்பீட் ஆகுமா? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு












Click it and Unblock the Notifications