மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு?
சென்னை: மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 3 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கியுள்ள திமுக, மீதமுள்ள 7 தொகுதிகளிலும் நேரடியாக களமிறங்கி இருக்கிறது. அதன்படி மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் அமைச்சர் மூர்த்தி, திருப்பரங்குன்றம் தொகுதியில் கிருத்திகா தங்கப்பாண்டி, திருமங்கலம் தொகுதியில் சேடப்பட்டி மணிமாறன், மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மேற்கு ரகு பாலாஜி, மதுரை வடக்கு கோ.தளபதி, சோழவந்தான் ஆ.வெங்கடேசன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. கடந்த முறை மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் 5ல் திமுகவும், 5ல் அதிமுகவும் வென்றது. இந்த முறை மதுரையில் கூடுதல் தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். இந்த தேர்தலில் மதுரை தெற்கு தொகுதி மீண்டும் மதிமுக வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மேலூர் மற்றும் உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளும் காங்கிரஸ் வசம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. கடந்த முறை திருப்பரங்குன்றம் தொகுதி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சூழலில், இம்முறை திமுக கையில் எடுத்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து திமுக சார்பாக கிருத்திகா தங்கப்பாண்டி போட்டியிடுகிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை திருமங்கலம் தொகுதியில் எதிர்த்து சேடப்பட்டி மணிமாறன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை மேற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை எதிர்த்து ரகு பாலாஜி களம் காண்கிறார்.
அதேபோல் மதுரை வடக்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ தளபதிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரை எதிர்த்து அதிமுக தரப்பில் சரவணன் களமிறங்கி இருக்கிறார். அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மீண்டும் 3வது முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ வெங்கடேசனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளராக மதிமுக சார்பாக பூமிநாதன் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மேலூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாகும்.
கடந்த தேர்தலிலும் மேலூர் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தள்ளிவிட்டது. ஆனால் உசிலம்பட்டி தொகுதியை கூடுதலாக பெற்றுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் திமுக பக்கம் வந்துள்ள சூழலில், அவர் காங்கிரஸ் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications