கிரிக்கெட் போட்டிக்கு நடுவிலும் தீயாய் வேலைபார்த்த திமுகவினர்.. மதுரை தமுக்கத்தில் நடந்த சம்பவம்
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட திரையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்களிடம் திமுக இளைஞர் அணியினர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெற்றனர்.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் தொடர் சென்னை உள்பட இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றதால் இந்திய அணியே கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து இருந்தனர். அதன்படியே இந்திய அணியும் முதலில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஒன்பது லீக் சுற்றில் இந்தியா தோல்வியே அடையாமல் வெற்றி பெற்று அரை இறுதி போட்டியில் நுழைந்தது. அரையிறுதியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்தது. மற்றொரு அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது.
ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமே இந்த போட்டியை ஆவலுடன் எதிபார்த்து இருந்தது. தமிழ்நாட்டிலும் உலக கோப்பை பைனல் போட்டியைக் காண பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மெரினா, பெசன்ட் நகர் பீச்சில் கிரிக்கெட் பார்க்க பிரம்மாண்ட எல்.இ.டி திரையுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இங்கு சுமார் 5 ஆயிரம் பேர் வரை கூடி மேட்சை பார்த்தனர். அதேபோல், மதுரை தமுக்கம் மைதானத்திலும் கிரிக்கெட் பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தமுக்கம் மைதானத்தில் திமுக இளைஞரணி சார்பில் எல்.இ.டி. திரை ஒன்று வைக்கப்பட்டு திரையிடப்பட்டு இருந்தது. பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். இந்திய அணி தோல்வி அடைந்த போதும் ஆஸ்திரேலியாவையும் கைதட்டி ரசிகரக்ள் பாராட்டியதையும் காண முடிந்தது.
இதற்கிடையே, போட்டியை பார்க்க வந்த கிரிக்கெட் ரசிகர்களிடம் திமுகவினர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து பெற்றனர். நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கியுள்ளார். 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று நீட் தேர்வுக்கு எதிரான மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பவும் திமுக இளைஞரணி தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications