மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க 2023ல் அனுமதி கேட்டதே திமுக அரசு தான்.. எடப்பாடி பழனிசாமி
மதுரை: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதே திமுக அரசுதான் என்று குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனுமதியை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதும் முதல்வர் ஸ்டாலின், அனுமதி கேட்டதை மறைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம், உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய, சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் டங்ஸ்டன் கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்துள்ளது. கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 4வது ஏலத்தில் மதுரை மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்திருந்தது.

இந்நிலையில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஏலத்தில் எடுத்துள்ள மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பானது, தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதி என்று கூறப்படுகிறது.
குறிப்பிட்ட நிலப்பரப்பில், 2,300 ஆண்டுகள் தொன்மையான மாங்குளம் தமிழிக் கல்வெட்டும், அக்கல்வெட்டில் சங்க கால பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகளும், அதில் செழியன், வழுதி போன்ற பாண்டியர் குடிப் பெயர்களும், பட்டப் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதேன்று, அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் உள்ள குகைத்தளத்தில் ஈராயிரமாண்டுகள் தொன்மையான இரண்டு தமிழிக் கல்வெட்டு காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும்
அரிட்டாபட்டி கழிஞ்ச மலையில் சுமார் 1200 ஆண்டுகள் பழமையான குடைவரை கோயில் அமைந்துள்ளது. கிபி. எட்டாம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்களால் மலைகளை குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் என்று சொல்லப்படுகிறது.
மீனாட்சிபுரம் ஓவா மலையில் உள்ள நான்கு குகை தளத்தில், 40க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும், அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் 20க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும் காணப்படுகிறது என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதுதவிர கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம பாண்டிய மன்னர் காலத்து சிவன் கோயில் அரிட்டாப்பட்டியில் உள்ளது. அரிட்டாபட்டி காமன்குளம் கண்மாயில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் காணப்படுகிறது. கழிஞ்சமலையின் வடக்கு முனையில் 200 ஆண்டுகள் பழமையான ரெட்டைக்கல் அவுலியா தர்கா அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இங்கு 72 ஏரிகள், 200 இயற்கைச் சுனைகள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளன. இங்கு பல வனவிலங்குகள் பல வாழ்கின்றன. 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த சூழலில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு (Hindustan Zinc Limited) டங்ஸ்டன் சுரங்க (Tungsten mining) அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மேலூர் சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டு மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகவும், டங்ஸ்டன் எடுக்க மத்திய அரசு வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னதாக மேலூர் மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து சுரங்கம் அமைக்கும் முடிவினை கைவிட வேண்டும் என்று கோரி முதல்வர் ஸ்டாலின் அண்மையில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த 2023 அக்டோபர் மாதம் திமுக அரசு தான் அனுமதி கேட்டதாக நாளிதழ் மற்றும் வலைதள செய்திகள் தெரிவிகின்றன. அனுமதியை ரத்து செய்யக் கோரி கடிதம் எழுதிய "பேனா வீரர்" முதல்வர் மு.க.ஸ்டாலின், அனுமதி கேட்டதே தனது அரசு தான் என்பதை மறைத்தது ஏன்?
நீட் தேர்வைக் கொண்டுவந்துவிட்டு அதை எதிர்ப்பது போல் நாடகமாடும் திமுக, அதே பார்முலாவை பயன்படுத்தி மேலூர் மக்களை ஏமாற்றுகிறது. திமுக அரசு மக்களைச் சுரண்டி சுரங்கம் அமைத்து , மக்களின் வாழ்விடத்தைப் பறிக்க திரைமறைவில் முயற்சி எடுத்து விட்டு ,
தற்போது செய்யும் இந்த கடித கபடநாடக ஏமாற்றுவேலைக்கு, மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் ." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!












Click it and Unblock the Notifications