அமித்ஷாவை விட 100 மடங்கு சக்தி வாய்ந்தோரை எதிர்த்த திமுக! 1 % கூட தமிழகத்தை காவியாக்க முடியாது: வைகோ
மதுரை: தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளை உள்ளே நுழைக்க நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்திலும் எந்த சக்தியும் நுழைய முடியாது. திமுகவை வீழ்த்தும் முயற்சி நடக்கிறது. திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக கூறியிருக்கிறார்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் மதிமுக நிர்வாகி ஒருவரின் நகைக்கடை திறப்பு விழாவில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று புதிய கடையை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

"தேர்தல் பற்றி இன்னும் நாங்கள் சிந்திக்கவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகு விருப்ப மனுக்கள் பெறுவோம். திமுக கூட்டணியில் சிறு சலசலப்பு கூட இல்லை.
திமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் 31 வருடமாக மதிமுகவை நடத்தி வருகிறேன்.. எனது தம்பிகள் துணை நிற்பதால் தொடர்ந்து கட்சி செயல்படுகிறது. முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடினேன்.
ஜிஆர் சுவாமிநாதன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார வரம்பை மீறி பேசுகிறார்... நீதிபதிகளை நான் மதிக்கிறேன், ஆனால், நீதிபதிகள் வரம்புக்குள் மட்டுமே பேச வேண்டும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என மிரட்டுகிறார். அவரது உத்தரவு ஜனநாயகத்துக்கு எதிரானது.
தமிழகத்தில் இந்துத்துவா சக்திகளை உள்ளே நுழைக்க நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்திலும் எந்த சக்தியும் நுழைய முடியாது. திமுகவை வீழ்த்தும் முயற்சி நடக்கிறது. திமுக மட்டுமின்றி கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. எதிர்கட்சிகளை நசுக்க பார்க்கிறது பாஜக. தமிழக ஆளுநராக இருக்க ஆர்.என்.ரவி தகுதியற்றவர்.
அமித்ஷா - 100 மடங்கு சக்தி திமுக
திமுகவை உடைத்து துடைத்து எறிவோம் என மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகிறார். அவரை விட 100 மடங்கு சக்தி கொண்டவர்களை திமுக எதிர்க்கொண்டுள்ளது. அமித் ஷா கட்சிகளை விமர்சனம் செய்யும்போது, கவனத்துடன் பேச வேண்டும். தன்னுடைய நாவை அடக்கி பேச வேண்டும்.
மத்திய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து பாஜக இந்தியாவை துண்டாட பார்க்கிறார்கள். இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பாஜக நினைக்கிறது. மத்திய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து இந்தியாவை பாஜக துண்டாட பார்க்கிறது.
எஸ்ஐஆர் புதிய வாக்காளர்கள்
எஸ்ஐஆர் நடவடிக்கையை வைத்துக் கொண்டு தமிழகத்தில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்படுகிறது. இதே எஸ்ஐஆர் மூலம் 65 லட்சம் வெளிமாநில புதிய வாக்காளர்களை தமிழகத்தில் சேர்க்க திட்டமிடுகின்றனர். இது மோசடி திட்டமாகும்.
தமிழக முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எனக்கு எப்போதும் கிடையாது. அதுபற்றி என்றுமே நான் பேசியதுமில்லை. மத்தியில் 2 முறை கேபினட் அமைச்சர் வாய்ப்பை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கொடுத்தும் ஏற்கவில்லை.
மணக்கோட்டை - மண் கோட்டை
விஜய் சினிமாவில் எழுதி கொடுத்து வசனங்களை பேசுவது போன்று பேசுகிறார். எம்ஜிஆர் வளர்ந்தார் என்றால் திமுகவின் கிளைக்கழகமாக அவர் செயல்பட்டார். அவர் அள்ளிக்கொடுக்கும் வள்ளலாக இருந்தார். சினிமாவில் நடிக்கும்போது, நெற்றியில் உதயசூரியனை வரைந்திருப்பார்.. கட்சியில் அமைப்பாக இருந்து சிறு மனவேறுபாட்டில் வெளியேறி அதிமுகவை தொடங்கி வெற்றி பெற்றார். அவர் போல ஆயிரத்தில் ஒரு மடங்கு கூட விஜய் இல்லை.
தவெக விஜய்யின் கனவு நினைவாகாது. காகித கப்பலில் அவர் கடலில் கடக்க முயல்கிறார். ஆகாய வெளியில் மணக்கோட்டையை கட்டுகிறார். அது வெறும் மண் கோட்டையாகவே போகும். பொது வாழ்வில் விஜய் நினைக்கும் இடத்திற்கு வரமுடியாது" என்று வைகோ கூறினார்.
வைரலாகும் மதுரை ஏர்போர்ட் பேச்சு
முன்னதாக திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மதுரை ஏர்போர்ட்டில், செய்தியாளர்களிடம் வைகோ பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..
"திருப்பரங்குன்றம் விவகாரம் திட்டமிட்டு இந்துத்துவாவாதிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 100 வருடங்களுக்கு முன்பாக அந்தத தூணில் விளக்கு ஏற்றும் பழக்கம் இல்லை உச்சிப்பிள்ளையார் கோவிலிலேயே சுடரேற்றுவார்கள்.
இந்த முறை திட்டமிட்டு அவர்கள் ஏற்ற முயற்சித்ததும், அந்த முயற்சி நடக்கும் போதே துலாக்கோள் நிலையில் இருந்து மீறி நீதியை பறிப்பாளனம் செய்யக்கூடிய நீதி அரசர் இந்துத்துவவாதியை போல தன்னுடைய மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு விளக்கு ஏற்றாவிட்டால் நடப்பது வேறு என்று அச்சுறுத்துகின்ற பாணியில் கொடுத்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது.
வந்தே பாரதம் பாடல்
நீதித்துறை, நிர்வாக துறை, சட்டமன்றம் மூன்றும் சேர்ந்த தான் ஒரு அரசு இயங்குகிறது. ஆனால், நீதித்துறையை சேர்ந்தவர்கள் சமீப காலமாக தனிப்பட்ட சொந்த வெறுப்புகள், சொந்த கருத்துக்களை திணிக்க முயலும்போதுதான் அபாயம் சூழ்கிறது. எனினும் மக்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.. ஒற்றுமையாக எடுக்கிறார்கள். இந்து, இஸ்லாமியர்கள் எந்தவித கலவர உணர்ச்சிக்கும் இடமும் கொடுக்கவில்லை. அந்த நிலைமை தான் நீடிக்க வேண்டும்.
அதேபோல திடீரென்று வந்தே மாதர கொடியை தூக்கிக்கொண்டு ஆதரவு திரட்டுகிறார்கள். பண்டித ஜவஹர்லால் நேரு அதற்கு உடன்படாததற்கு என்ன காரணம்? பக்கிம் சந்தர் சட்டர்ஜி தான் எழுதிய ஆனந்தமடம் நாவலில், வந்தே மாதரம் கவிதையை பதிவு செய்திருந்தார்கள். எனவே அரவிந்தர் நூற்றாண்டு விழாவின்போது, அதனை தமிழ்ப்படுத்தி போட்டிருந்தார்கள்.
கடைசி 2 வரிகள்
முதல் வரிகள் பிரச்சனை இல்லை, ஆனால் கடைசி 2 வரிகள் இந்து கடவுள்களை பெயர்களை சொல்லாமல் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இன்று அவர்களை புகழ்ந்து பாடுகிற விதத்தில் தான் அமைந்திருந்தது. அதனால் தான் வந்தே மாதரத்தை அப்போது ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று நேரு சொன்னார்.. நேதாஜியும் சொன்னார். இப்போது அது பேசுபொருளாகி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்துள்ளது.
புதிதாக எப்படி இந்துத்துவாவை திணிக்கலாம்? அதுவும் தமிழ்நாட்டிற்குள் எப்படி திணிப்பது? என்று இவர்கள் பேராசைப்படுகிறார்கள்.. ஆனால் இது தமிழ்நாடு.. மதச்சார்பற்ற தன்மைக்கு இலக்கணமான மாநிலம்... இங்கு அப்படியான விஷத்தை கக்கி வேறுபாடுகளையும், மோதல்களையும் ஏற்படுத்த ஒருபோதும் முடியாது.
1 சதவீதம்கூட முடியாது
திராவிட இயக்கத்திலே ஊறி திளைத்த பூமி பெரியார், அண்ணா, கலைஞரால் என எண்ணற்ற தியாகிகளால் பக்குவப்படுத்தப்பட்ட மாநிலம் தான் இந்த தமிழ்நாடு. எனவே இந்த பிரச்சனைகளில் அவர்கள் இந்துத்துவா, RSS பின்னணியில் இந்தியாவை காவி மயமாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
உத்தர் பிரதேசம், பீகாரில் வேண்டுமானால் இதனை செய்யலாமே தவிர தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அவர்கள் ஒருபோதும் ஒரு சதவீதம் கூட திணிக்க முடியாது என்பது திட்டவட்டமாக சொல்கிறேன்" என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
-
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்?










Click it and Unblock the Notifications