Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேப்பரில் எழுதியதை கூட தப்பு தப்பா பேசுறாரு விஜய்! ஆசிட் ஊற்றுவேன்னு சொல்றாங்க! திவ்யா ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தவெக தலைவர் விஜய் பேப்பரில் எழுதி இருப்பதை கூட தப்பு தப்பாக மேடையில் பேசுகிறார். அரசியல் மேடையை வெறும் பஞ்ச் டயலாக் பேசியும் பாட்டு பாடியும் ஓட்டி விட முடியாது என திமுக ஐடி அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திவ்யா பேசுகையில், தவெக தொண்டர்களுக்கு தங்களின் கட்சிக் கொள்கையே என்னவென தெரியாது. எத்தனை தொகுதி ஜெயித்தால் ஆட்சியமைக்க முடியும் என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

vijay divya sathyaraj tvk

தவெக தலைவர் விஜய் பேப்பரில் எழுதி இருப்பதை தப்பு தப்பாக மேடையில் வாசிக்கிறார். அவ்வப்போது என்ன பேச வேண்டும் என்ற டயலாக்கையும் மறந்துவிடுகிறார்.

அரசியல் மேடையை வெறும் "பன்ச் டயலாக்" பேசியும், பாட்டு பாடியும் ஓட்டிவிட முடியாது. நீங்கள் "தூய சக்தி" என்பதை எப்படி நம்புவது? தூய சக்தி தங்களின் திட்டம் குறித்து இதுவரை வாய் திறந்திருக்கிறதா?

விஜய்க்கு தன் கட்சியின் 10 நிர்வாகிகளின் பெயர்கள் கூட தெரியாது. கொள்கையே தெரியாத புரிதல் இல்லாத தொண்டர்களால், தவெக அரசியல் எதிர்காலமே இல்லாமல் தள்ளாடி வருகிறது.

தவெகவில் இருப்பவர்கள் பிற கட்சி பெண்களை அநாகரீகமாக பேசுகிறார்கள். சோசியல் மீடியாவில் "நாளைக்கு உன்னை சாகடித்து விடுவேன். ஆசிட் ஊற்றி விடுவேன்" போன்ற தரம் தாழ்ந்த கமென்டுகளில் தவெகவினர் திட்டுகிறார்கள்.

தங்கள் கட்சி தொண்டர்களையே கட்டுப்படுத்த தெரியாத தலைவனால் ஆட்சிக்கு வந்து சட்டம், ஒழுங்கை எப்படி கட்டுப்படுத்த முடியும் என திவ்யா சத்யராஜ் கேள்வி எழுப்பினார்.

இது போல் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட விஜய்யை விமர்சித்துள்ளார். சென்னையில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் சத்யராஜ் மகளும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளருமான திவ்யா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நம்ம துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் அருமையான தலைவர். ஏனென்றால், திரையில் வந்து டான்ஸ் ஆடுகின்றவர் தலைவர் கிடையாது.. தரையில் இறங்கி அடிக்கிறார் பாருங்க அவர் தான் தலைவர்.. எவன் செத்தால் எனக்கு என்ன என்று படையப்பா படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மேடம் போல ஆபீஸ் ரூமில் இருந்து லாஜிக்கே இல்லாமல் ஸ்லோமோஷன் ல பேசுகின்றவர் தலைவர் கிடையாது.

துபாய் பயணத்தை கேன்சல் செய்துவிட்டு மக்களுக்காக ஓடி வந்தார் பாருங்க அவர் தான் தலைவர். கரூர் சம்பவத்தை பற்றி லாஜிக்கே இல்லாமல் புது கட்சியில் இருந்து வந்தவங்க சில கேள்விகளை கேட்டாங்க.. ஏன் செந்தில் பாலாஜி கரூர் சம்பவத்தின் போது ஆஸ்பத்திரிக்கு எப்படி உடனே வந்தார் என கேட்டாங்க.. அவருடைய எஃபிசென்சிய காண்பிக்கிறது.

ஏன் அன்பில் மகேஷ் அண்ணா அழுதார் என்று கேட்கிறாங்க.. ஏன் என்றால் அவருக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. ஏன் ஜோதிமணி மேடம் ஓடி வந்தார்கள்.. ஜோதிமணி மேம் ஓடி வந்தது அவங்களுக்கு மக்கள் மீது இருக்கிற கருணையை காண்பிக்கிறது. கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க.. சும்மா லாஜிக்கே இல்லாமல், நீங்க பெர்மிசன் கொடுக்கவில்லை. கொடுக்கவில்லை என சொல்கிறார்கள். ஏன் எல்லாத்தையும் எங்க கிட்ட கேட்டா செய்யுறீங்க.. நாங்க என்ன பிரின்ஸ்பல்.. நீங்க எல்.கே.ஜி ஸ்டூடண்டா.. எல்லாத்தையும் எங்க பெர்மிசனோடு தான் பண்றீங்களா.. எனவே கொஞ்சம் லாஜிக்கோடு பேசுங்க.. காவல்துறை எதுக்கு இருக்காங்க.. நம்மளை பாதுகாக்கிறதற்கு.. ஆனால் காவல்துறை மீது பால் வீசுறுது.. மரத்து மேல ஏறுகிறது.. காவல்துறையை கடித்து வைக்கின்றது.. இதையெல்லாத்தையும் ஒரு தலைவர் கண்ட்ரோல் பண்ணனுமா வேண்டாமா?

நான் இவ்வளவு பேசிவிட்டேன். நான் இங்கிருந்து என் வீட்டுக்கு போய் இறங்குறதுக்குள்ள புதிய கட்சி தொடங்கியவர்கள் என்னை விமர்சிப்பார்கள். என்னை மட்டுமில்லை, திராவிட பெண்களை எல்லாம் விமர்சிப்பார்கள். நான் உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன், உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதுங்கள். என் வீட்டில் நானும் அம்மாவும்தான் இருக்கோம். அப்பா ஷூட்டிங் போய்விட்டார் என கூறி தனது நுங்கம்பாக்கம் வீட்டு முகவரியை திவ்யா சொன்னது அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+