பரம்பரை Vs பலம்.. பிடிஆருக்கும் மூர்த்திக்கும் பஞ்சாயத்து! இடியாப்ப சிக்கலில் இந்திராணி! பரபர மதுரை!
மதுரை: ஆளும் கட்சியான திமுகவிலும் மோஷடி மோதல் வெடித்திருக்கிறது. அதுவும் தமிழகத்தின் முக்கிய மாவட்டமான மதுரையில். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி இடையான பனிப் போரில் சிக்கி தவிக்கிறது மதுரை மாநகராட்சி. ஊழல் விவகாரத்தில் மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், மேயர் இந்திராணிக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் அவர் பதவி விலகலாம் என சொல்லப்படுகிறது.
2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் மதுரையில் இருந்து நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக மூர்த்தியும் பதவி ஏற்றனர். அமைச்சர் பிடிஆர்-ன் குடும்பமே அரசியல் பாரம்பரிய மிக்கதாகும்.
அவரது அப்பா பழனிவேல் ராஜன், தாத்தா பி. டி. ராஜன் என அரசியலில் ஊறித் திளைத்த குடும்பம். மேலும் மதுரையில் மிகவும் பாரம்பரியமிக்க மரியாதைக்குரிய குடும்பங்களில் பிடிஆர்-ன் குடும்பமும் ஒன்று. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தொடங்கி பல்வேறு கோவில் திருப்பணிகளை முன் நின்று நடத்திய குடும்பம்.

அதனால் தான் இளம் வயதாக இருந்தாலும் 2016 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மதுரையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் 2021 ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் ஆடியோ விவகாரம் ஒன்றில் சிக்கியதால் பிடிஆர்-ன் துறை பறிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஆரம்பத்தில் இருந்து அமைச்சர் மூர்த்திக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் வெளிப்படையாகவே இருந்தது. ஆனால் அமைச்சர்கள் அதனை நேரடியாக வெளிக்காட்டக் கொள்ளவில்லை.
குறிப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி திமுக கைப்பற்றியதும், தனது ஆதரவாளரை மேயராக்க அமைச்சர் மூர்த்தி முயன்றார். ஆனால் அப்போது வென்றது பிடிஆர் தான். இந்த நிலையில் நாளுக்கு நாள் திமுக தலைமையின் மீதான அதிருப்தியின் காரணமாக பிடிஆர் ஒதுங்கி இருக்கிறார். அதே நேரத்தில் அமைச்சர் மூர்த்தியின் செல்வாக்கு ஓங்கி இருக்கிறது. மதுரையிலும் ஏராளமான திமுக நிர்வாகிகள் மூர்த்தியின் ஆதரவாளராக மாறிவிட்டனர்.
இந்த நிலையில் தான் திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மதுரை மாநகராட்சி ஊழல் விவகாரம் வெளிவந்தது. வரி வசூலில் மோசடி செய்து 200 கோடி ரூபாய் வரை ஊழல் செய்தாக மதுரை மாநகராட்சி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் கேஎன் நேரு விசாரணை நடத்தினர். அதில் இரண்டு நிலை குழு உறுப்பினர்கள், நான்கு மண்டல குழு தலைவர்கள் மற்றும் அவர்களது கணவர்களின் தலையீடு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வற்புறுத்திய நிலையில் அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
மேலும், பிடிஆர், மூர்த்தி முன்னிலையில் விசாரணை நடத்திய அமைச்சர் கேஎன் நேரு மதுரை மேயர் இந்திராணியை கடுமையாக எச்சரித்ததாக சொல்லப்படுகிறது. மாநகராட்சி ஊழல் விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்திருக்கும் நிலையில் மேயர் இந்திராணிக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என அமைச்சர் மூர்த்தியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியதாக சொல்லப்படுகிறது.
காரணம் மேயர் இந்திராணி பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்திலிருந்து இந்திராணி விவகாரம் காரணமாகத் தான் இரு அமைச்சர்களுடைய முட்டல் மோதல் உருவானது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு ஒரு அமைச்சரின் நிகழ்ச்சியை மற்றொரு அமைச்சர் புறக்கணிப்பது, ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்காமல் இருப்பது என மோதல் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது அமைச்சர் மூர்த்தியின் கை ஓங்கி இருக்கும் நிலையில் இந்திராணிக்கும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
இதனால், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்கள் என்ன செய்வது என்பது தெரியாமல் புலம்பி வருகின்றனர். அதே நேரத்தில் பிடிஆரை விட்டுக் கொடுக்கவும் திமுக தலைமை விரும்பவில்லை. அதனால் தான் இந்திராணி இன்றுவரை பதவியில் தொடர்கிறார். ஒருவேளை பிடிஆரைப் பகைத்துக் கொண்டால் மதுரையில் பாரம்பரியமிக்க அவரது குடும்ப ஆதரவு வாக்குகள் உடையும் என்பதால் திமுக தலைமை பொறுமை காத்து வருவதாக சொல்லப்படுகிறது.
-
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
லோக்கல் பாலிடிக்ஸ்..கண் வைத்த கனிமொழி! க்ரீன் சிக்னல் கொடுக்காத ’உடன்பிறப்பு’..’சிலருக்கு’ சிக்கலாமே -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
டிபன்டர் காருடன் போஸ் கொடுத்த.. பிரேமலதா! திமுகவுக்கு தேவையில்லாத ஆணி.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications