மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாரணாசியில் சிக்கிய 40-க்கும் மேற்பட்ட தமிழக மக்களை மீட்ட திமுக எம்எல்ஏ சரவணன்

Google Oneindia Tamil News

மதுரை: கொரோனா ஊரடங்கிற்கு முன்னரே காசிக்கு சென்று தற்போது வரை வீடு திரும்ப முடியாமல் தவித்து வந்த திருப்பரங்குன்றம் தொகுதியை சார்ந்த 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தமிழகம் அழைத்து வருவதற்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தற்போது அவர்களை தமிழகம் அழைத்து வந்துள்ளார்.

 DMK MLA Saravanan rescues 40 and more Tamil people from Varanasi

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நிலையூர் கைத்தறிநகரைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நபர்கள் மார்ச் மாதத்திற்கு முன்னர் ஆன்மீக பயணமாக காசி யாத்திரை சென்றுள்ளனர்.

 DMK MLA Saravanan rescues 40 and more Tamil people from Varanasi

கொரோனா ஊரடங்கினால் இந்தியா முழுவதும் விமான சேவை, இரயில் சேவை, போக்குவரத்து சேவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டதால் வீடு திரும்ப முடியாமல் அங்கே உள்ள மடத்தில் தங்கியிருந்தனர். அவர்களுக்கு டாக்டர்.பா.சரவணன் எம்எல்ஏ நிதியுதவி அளித்தும், அவர்களை தமிழகம் அழைத்து வருவதற்கும் மாவட்ட ஆட்சியாளர் மூலம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார்.

 DMK MLA Saravanan rescues 40 and more Tamil people from Varanasi

தற்போது அரசாங்க உத்தரவின் பேரில் டாக்டர்.பா.சரவணன் அவர்கள் உரிய பயண அனுமதி பெற்று அவர்களில் முதல் 14 நபர்கள் சொந்த ஊருக்கு வந்தடைய உதவியுள்ளார். மீதமுள்ள நபர்கள் அடுத்தடுத்த வாகனங்கள் மூலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

 DMK MLA Saravanan rescues 40 and more Tamil people from Varanasi

சொந்த ஊர் திரும்பிய அவர்களை டாக்டர்.பா.சரவணன் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களையும், உதவித்தொகையும் வழங்கியுள்ளார். பொதுமக்கள் அனைவரும் டாக்டர்.பா.சரவணனுக்கு நன்றி தெரிவித்தனர்.

கொரோனா.. மோசமான பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் சொல்கிறார் கொரோனா.. மோசமான பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் சொல்கிறார்

English summary
DMK MLA Saravanan rescues 40 and more Tamil people from Varanasi. People thanked him for his timely help.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X