நாடாளுமன்ற குழு தலைவர் 'அண்ணியார்' கனிமொழி அவர்களே.. அமைச்சர் கே.என்.நேருவின் அதிரவைத்த பேச்சு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழியை குறிப்பிடும் போது, 'அண்ணியார் கனிமொழி அவர்களே' என குறிப்பிட்டது அனைவரையும் ஒருசேர திரும்பிப் பார்க்க வைத்தது. அமைச்சர் கே.என்.நேரு தம்மை அண்ணியார் என அழைத்ததை கேட்ட அருகில் அமர்ந்திருந்த கனிமொழி எம்பி ஒரு நிமிடம் திகைத்துப் போனார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை, திண்டுக்கல் தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களின் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார்.

dmk nehru kanimozhi

மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன், எம்பிக்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், தங்க தமிழ்ச்செல்வன், ராணி ஶ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த 11 மாவட்டங்களின் எம்.எல்.ஏக்களும் மேயர்களும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அனைத்து கூட்டங்களுக்கும் தாமதமாக வருகை தரும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களே என்றார். அப்போது அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

dmk nehru kanimozhi

இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்பியை அமைச்சர் கே.என்.நேரு பேச அழைத்தார். அப்போது, நாடாளுமன்ற குழுவின் தலைவர் 'அண்ணியார் கனிமொழி அவர்களே' என குறிப்பிட்டார். அமைச்சர் கே.என்.நேரு தம்மை அண்ணியார் என அழைத்த உடன் ஒரு கணம் கனிமொழி எம்பி திகைத்தபடியே அவரைப் பார்த்தார். கனிமொழி எம்பியை அமைச்சர் கே.என்.நேரு 'அண்ணியார்' என அழைத்தது அனைவரையும் திரும்பிப் பார்க்கவும் வைத்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்பி, தூத்துக்குடி குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்; திருச்செந்தூருக்கு குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்; திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என அடுக்கடுக்காக கோரிக்கைகளை முன்வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+