வாட் ப்ரோ.. அடக்கி வாசிங்க ப்ரோ.. விஜய்யை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்.. திமுக கொடுத்த வார்னிங்!
மதுரை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை கண்டித்து திமுக இளைஞரணி சார்பாக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் விஜயை கண்டித்து, "வாட் ப்ரோ.. ஓவர் ப்ரோ.. அடக்கி வாசிங்க ப்ரோ" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இது தவெக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு 3 நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்தது விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த மாநாட்டில் விஜய் பேசுகையில், ஒரு தவறு செய்தால்.. அதனை தெரிந்து செய்தால்.. அவர் கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும்..

அங்கிள்.. அங்கிள்.. உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால்.. நான் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க அங்கிள்.. உங்கள் ஆட்சியில் ஊழல் இல்லாமல் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சொல்லுங்க மை டியர் அங்கிள்.. டாஸ்மாக்கில் மட்டுமே ரூ.1,000 கோடி ஊழல் என்று சொல்கிறார்கள்.
உலகிலேயே மிஸ்டர் கிளீன் ரெக்கார்ட்ஸ் உங்களுக்கும், உங்கள் கூட இருக்கிறவர்களுக்கும் மட்டும்தான் அங்கிள் கொடுக்கணும்.. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா அங்கிள்.. பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையென்று கதறுகிறார்கள்.. அந்த கதறல் சத்தம் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா அங்கிள்.. அதுல வேற உங்கள அப்பானு கூப்பிடுறதா சொல்றீங்க..
வாட் இஸ் திஸ் அங்கிள்.. இட்ஸ் வெரி வெரி ராங் அங்கிள் என்று பேசி இருந்தார். முதல்வர் ஸ்டாலினை தொண்டர்களை குஷிப்படுத்தும் நோக்கி அங்கிள் என்று விஜய் அழைத்தது திமுகவினர் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜயை கண்டித்து மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் திமுக இளைஞர் அணி தரப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், "வாட் ப்ரோ.. ஓவர் ப்ரோ.. அடக்கி வாசிங்க ப்ரோ" என்று வாசகம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் திமுக இளைஞரணி நிர்வாகிகள் தரப்பில் சோசியல் மீடியாவிலும் ட்ரெண்டாகி வருகிறது. இதனால் திமுக மற்றும் தவெக நிர்வாகிகள் இடையில் வார்த்தை மோதல் தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications