மதுரை வரிச்சியூர் செல்வத்துக்கு இத்தனை சொத்துகளா.. அதில் பாதி எத்தனை கோடிக்கு போகும்னே தெரியாதா?
மதுரை: மதுரை வரிச்சியூர் செல்வத்தின் சொத்து மதிப்பு குறித்து அவரே ஒரு பேட்டியில் கொடுத்த தகவலை பார்க்கலாம்!
மதுரையை அடுத்த வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரு காலத்தில் ரவுடியாக செயல்பட்டார். இவரது பணியே கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொலை மிரட்டல், ரவுடியிசம் என வாழ்ந்து வந்தார். இவர் மீது நிறைய வழக்குகள் இருந்தன.
இந்தியாவில் இவர் போகாத ஜெயிலே இல்லை என சொல்லும் அளவுக்கு அவர் நிறைய சிறைகளில் தண்டனையை அனுபவித்து வந்துள்ளார். தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்த வரிச்சியூர் செல்வத்தை ஒரு கட்டத்தில் போலீஸார் என்கவுன்ட்டர் செய்யவும் திட்டமிட்டிருந்தனர்.

வரிச்சியூர் செல்வம்
இதையடுத்துதான் வரிச்சியூர் செல்வம் தனது ரவுடி தொழிலை விட்டுவிட்டார் என்கிறார்கள். மேலும் இனி எந்த தவறையும் நான் செய்ய மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பத்திரத்தையும் போலீஸாரிடம் வழங்கினார். அதன் பிறகு வரிச்சியூர் செல்வம் ஜாலி வாழ்க்கைக்கு மாறினார். அவரது பேரை கேட்டாலே நினைவுக்கு வருவது அவருடைய நகைகள்தான்!

சினிமா படங்கள்
இவர் சினிமா படங்களையும் எடுத்து வருகிறார். இவர் பேரன் பேத்திகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார். உடல் முழுவதும் போட்டிருக்கும் நகைகளின் மதிப்பு 204 பவுன் ஆகும். கழுத்தில் முறுக்கு சங்கிலி போட்டுள்ளார். அது மட்டுமே 100 பவுனுக்கு மேல் என சொல்லப்படுகிறது. கொரோனா காலத்தில் 10 பவுனில் தங்கத்தில் முகக்கவசம் அணிந்திருந்தார் வரிச்சியூர் செல்வம்.

4 அல்லது 5 வழக்குகள்
இவர் மீது 4 அல்லது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவற்றையெல்லாம் விரைந்து முடித்து கொண்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா போக விரும்புகிறார் செல்வம். தற்போது இவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. எனவே வழக்குகள் கிளியரானால் மட்டுமே அவரது பாஸ்போர்ட் கிடைக்கும். தனக்கு இருக்கும் சொத்து மதிப்புகள் குறித்து வரிச்சியூர் செல்வம் ஒரு யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டியை அளித்துள்ளார்.

இயற்கையாகவே வசதியானவன்
அதில் வரிச்சியூர் செல்வம் கூறுகையில் நான் இயற்கையாகவே வசதியான வீட்டை சேர்ந்தவன். என்னிடம் நிறைய கார்கள், நகைகள், மோதிரங்கள், கூலிங் கிளாஸ்கள், வாட்ச்கள் உள்ளிட்டவை உள்ளன. என் கழுத்தில் போட்டிருக்கும் நகைக்கு மட்டுமே நான் இதுவரை 45 லட்ச ரூபாய் வருமான வரி கட்டியுள்ளேன். என்னிடம் லேண்ட் ரோவர், பார்ச்சூனர் என உயர ரக கார்கள் 7 உள்ளன.

ரூ 3 கோடிக்கு மேல் சொத்துகள்
வரிச்சியூரில் மட்டுமே எனக்கு ரூ 3 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளனர். நிறைய இடங்கள் உள்ளன. அவை எல்லாம் எத்தனை கோடிக்கு போகும் என தெரியாது. இவையெல்லாம் நான் சம்பாதித்தது அல்ல, என் அப்பா சம்பாதித்தது. நான் யாரிடமும் அடித்து பறித்தது இல்லை. என்னுடைய மகன், மருமகன் எல்லாம் தொழில் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் சேர்ந்து எனக்கு மாதம் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை கொடுப்பார்கள். இதை அப்படியே வாங்கி செலவழிப்பேன்.

வழக்கறிஞர் செலவு
8 ஆண்டு காலத்தில் வழக்கறிஞர் செலவுக்காக மட்டுமே ரூ 7 கோடி அளவிற்கு செலவழித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு பேட்டிகளில் ஜெயில் வாழ்க்கையை விட தற்போதுள்ள வாழ்க்கைதான் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் ஜெயில் வாழ்க்கை என் எதிரிக்கு கூட வரக் கூடாது என கூறியிருந்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications