வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் மிதந்த மேட்டரில் ட்விஸ்ட்.. வட்டாட்சியர் அலுவலக ஊழியர் கைது
மதுரை: சில நாட்களுக்கு முன்பு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்தன. இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பணிபுரியும் முதுநிலை வரைவாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 10,000 இடங்களில் முகாம்கள் நடைபெற்று சுமார் 45 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை மக்கள் அளித்து வருகின்றனர். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உரிய பயனாளிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எனவே பொதுமக்கள் முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை நடந்த முகாம்கள் மூலம், லட்சக்கணக்கான மனுக்கள் பெறப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியானது.
வைகை அணையில் மிதந்த மனுக்கள்
முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் பூர்த்தி செய்யப்பட்டு அலுவலர்களிடம் வழங்கப்பட்ட நிலையில் அந்த மனுக்கள் ஆற்றில் மிதந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார் என விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்து வந்ததாகவும், ஆற்றில் மிதக்கும் மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர்.
தீவிர விசாரணை
இந்த விவகாரம் குறித்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாகப் பணிபுரிந்த 7 அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்த 13 பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக, வட்டாட்சியர் விஜயகுமார் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில், திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், மனுக்களை திருடிய நபரைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பணிபுரியும் முதுநிலை வரைவாளர் சரவணனுக்கு 17 'பி'-ன் கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவுட்சோர்சிங்கில் பணிபுரியும் புல உதவியாளர் அழகுப்பாண்டியை பணி நீக்கம் செய்யவும், நில அளவைத் துறை உதவி இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
உதவி வரைவாளர் கைது
இதற்கு, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பணிபுரியும் உதவி வரைவாளர் முத்துக்குமரனை (42) போலீசார் விசாரித்தனர். நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர், முறையான ஆதாரம் இல்லாமல் கைது செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். வைகை ஆற்றுப் பாலத்தில் முத்துக்குமரன் சென்று வந்தது அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவானதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், முத்துக்குமரன் மனுக்கள் கொண்டு வந்ததற்கோ, ஆற்றில் வீசியதற்கோ ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டுமென சங்கத்தினர் வலியுறுத்தினர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், டிஎஸ்பி பார்த்திபன், ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று முழுவதும் விசாரணை நடத்தினர். பின்னர், வைகை ஆற்றுப் பாலத்துக்குச் சென்று வந்ததற்கு முத்துக்குமரன் முறையாக காரணம் கூறவில்லை என்று கூறி அவரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications