"குழந்தை வேணுமா".. பஸ் ஸ்டாண்டில் கூவி கூவி சென்ற குடிகார தந்தை.. கொத்தாக அள்ளி சென்ற போலீஸ்
குடிபோதையில் குழந்தையை விற்க முயன்ற தந்தை கைதானார்
மதுரை: "குழந்தை வேணுமா குழந்தை.. நான் தரேன்.. வாங்கிக்குங்க.." என்று இளைஞர் ஒருவர் பச்சிளம் குழந்தையை பஸ் ஸ்டாண்ட் முழுக்க தூக்கி கொண்டு.. போதையில் விற்க முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை தந்துள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஊர் பூவாளூர்.. இங்கு வசித்து வந்தவர் ராஜதுரை.. 30 வயதாகிறது.. திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கல்யாணமாகிவிட்டது.. 2 கல்யாணம்... சித்ரா, பேச்சியம்மாள் என்ற 2 மனைவிகள் உள்ளனர்.. 2 மனைவிகளுடன் ஒரே வீட்டில் திருப்பூரில் வசித்து வருகிறார் ராஜதுரை.

சித்ராவிற்கு, 10 வயதில் மகன் இருக்கிறான்.. பேச்சியம்மாளுக்கு இப்பதான் 8 மாசத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.. ஆனால் ராஜதுரையுடன் பேச்சியம்மாளுக்கு சண்டை வந்துவிட்டது. அதனால், 2 மாசத்துக்குமுன்பு கோபித்து கொண்டு, திருநெல்வேலியில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார்.. போனவர் அந்த பச்சிளம் குழந்தையை ராஜதுரையிடம் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அந்த குழந்தையை சித்ராதான் கவனித்து வந்தார். ஆனால், தொடர்ந்து பராமரிக்க அவரால் முடியவில்லை.. அதனால் ராஜதுரை குழந்தையை தூக்கி கொண்டு பேச்சியம்மாளிடம் ஒப்படைக்க சென்றார். மதுரை மாவட்டம், திருமங்கலம் பஸ் ஸ்டேண்டுக்கு வந்தவர், அங்கேயே தண்ணி அடித்தார்.. பிறகு போதை தலைக்கேறிவிட்டது.. அதனால், பஸ் ஸ்டேண்டில் இருந்தவர்களிடம் 'குழந்தை வேணுமா? வாங்கிக்கிறீங்களா? குழந்தை வேணுமா" என்று எல்லோரிடமும் குழந்தையை காட்டி காட்டி விற்க முயன்றார்.
தொடர்ந்து தொந்தரவு செய்த அவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போதை தெளிந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. உடனடியாக பேச்சியம்மாளை, திருமங்கலம் வரவழைத்து குழந்தையை அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஆனால் ராஜதுரையை விடுவிக்கவில்லை.. அவருக்கு மட்டும் ஸ்டேஷனில் ராஜமரியாதையுடன் கவனிப்பு நடக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications