Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீக்கிரம் பணக்காரன் ஆகணும்! கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு! நஷ்டத்தால் மதுரை இளைஞர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

மதுரை: பங்குச் சந்தையில் மதுரை இளைஞர் ஒருவர் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். இருப்பினும், அது நஷ்டமடையவே அவர் விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.

பங்குச் சந்தை என்பது இரு புறமும் கூராக இருக்கும் கத்தியைப் போன்றது. அதில் முறையாகக் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து, காத்திருந்தால் சில ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.

அதேநேரம் சிலர் உடனடியாக பணத்தைச் சம்பாதிக்கவும் பங்குச் சந்தையைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் கடுமையான நஷ்டம் ஏற்படும். அப்படி நஷ்டம் ஏற்பட்டதில் ஒருவர் விபரீதமான முடிவை எடுத்துள்ளார்.

 பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது இப்போது பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதிலும் குறிப்பாக டிரேடிங் செயலிகள் வந்த பிறகு, முதலீடு செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. வெறும் சில நொடிகளில் முதலீடு செய்யலாம், குறைந்த கட்டணம் உள்ளிட்டவை காரணமாகப் பலரும் முதலீடு செய்கின்றனர். இருப்பினும், பங்குகளில் முதலீடு செய்தால் குறைந்தது சில ஆண்டுகள் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

 மோசமான சம்பவம்

மோசமான சம்பவம்

சரியான பங்குகளை வாங்கினாலும் கூட காத்திருக்க வேண்டும். ஆனால், சிலர் விரைவாகப் பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்கிறார்கள். குறிப்பாகக் கடன் வாங்கி எல்லாம் முதலீடு செய்கிறார்கள். நமது சேமிப்பின் ஒரு பகுதியைத் தான் முதலீடாகச் செய்ய வேண்டும்... நிச்சயம் கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது என்று பலரும் அறிவுறுத்தினாலும், அதைப் பலரும் கேட்பதில்லை. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது மதுரையில் நடந்துள்ளது.

 மதுரை

மதுரை

மதுரையில் அவனியாபுரத்தில் பிரசன்னா காலணியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். 39 வயதான இவர் தனது மனைவியுடன் அங்கே வசித்து வருகிறார். கோவையில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் இவருக்கு, பங்குச் சந்தை முதலீடு குறித்து சமீபத்தில் தெரிய வந்துள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், கொஞ்ச முதலீட்டில் அதிக லாபம் பார்க்கலாம் என்று இவரது நண்பர்கள் கூறியதாகத் தெரிகிறது. இதை நம்பி அவரும் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார். முதலில் கொஞ்சக் காலத்தில் ஓரளவு லாபம் பார்த்துள்ளார்.

 கடன் வாங்கி முதலீடு

கடன் வாங்கி முதலீடு

இதனால் மற்றவர்களிடமும் கடன் வாங்கி ஜெகதீஷ் முதலீடு செய்துள்ளார். இப்போது பங்குச் சந்தை கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், அவரும் அதில் வசமாக மாட்டிக் கொண்டார். அவர் வாங்கிய பல பங்குகளின் மதிப்பு கடுமையாகச் சரிந்ததாகத் தெரிகிறது. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துள்ளார். அவருக்குக் கடன் கொடுத்தவர்களும் அவரிடம் கடனை கேட்க ஆரம்பித்துள்ளனர். முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு கடுமையாகச் சரிந்ததால் ஜெகதீஷால் அவர்களுக்குக் கடனை திரும்ப அளிக்க முடியாமல் போனது.

 தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை

இதனால் அவர்கள் அடிக்கடி கடனை கேட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். மேலும், சிலர் அவர் மீது போலீசிலும் புகார் அளித்தாகத் தெரிகிறது. கடன் அதிகமாக இருந்ததால், அவரால் திரும்பி அளிக்க முடியவில்லை. கடன் தொல்லையினால் மனமுடைந்து காணப்பட்ட ஜெகதீஷ், நேற்றிரவு வீட்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை எடுத்துச் சாப்பிட்டுவிட்டார். இதனால் கொஞ்ச நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

 தற்கொலை

தற்கொலை

திடீரென அவர் மயங்கி விழுந்ததால் பதறிப் போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை, மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஜெகதீஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.

 உதவி எண்கள்

உதவி எண்கள்

மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்த பெண்ணை தக்க நேரத்தில் காப்பாற்றிய பல்லாவரம் போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர். எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050

ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+