மிஸ்டர் அண்ணாமலை அவர்களே! தமிழ்நாட்டில் சனாதனத்தை வேரறுப்போம்! உதயநிதி ஸ்டாலின் டோனில் துரை வைகோ!
மதுரை: சனாதன தர்மத்தை வேரறுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் இருப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தாங்கள் இந்து மதத்திற்கோ, இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல என்றும் சனாதன கோட்பாடுகளை தான் தாங்கள் எதிர்க்கிறோம் எனவும் அவர் பேசியிருக்கிறார். மதுரையில் நடைபெற்ற மதிமுக மாநாட்டில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

மிஸ்டர் அண்ணாமலை அவர்களே நீங்கள் பிறப்பதற்கு முன்னரே தமிழ்நாட்டில் சனாதனத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டு விட்டது என்றும் சனாதனத்தின் முதுகெலும்பை முறித்தவர் பெரியார் எனவும் துரை வைகோ பேசினார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அச்சு அசல் அப்படியே தனது தந்தை வைகோ டோனில் ஹைடெசிபலில் துரை பேசியது தான்.
சனாதனம் குறித்த துரை வைகோவின் பேச்சுக்கு மதிமுக மாநாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று நாட்டில் தீண்டாமையும், சாதிய வன்கொடுமையும் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் சனாதன ஆதரவாளர்கள் தான் என துரை வைகோ வேதனைத் தெரிவித்துள்ளார்.
சனாதனம் இருக்கும் வரை சாதிய கொடுமைகளும் இருக்கும் என்றும் சமத்துவத்துக்கு எதிரான சனாதன தர்மத்தை, சமூக நீதிக்குக்கு எதிரான சனாதன தர்மத்தை தமிழக மண்ணில் வேரறுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதன் இரண்டு பிறவியில் கொடுக்க வேண்டிய உழைப்பை இந்த தமிழ் சமூகத்திற்காக கொடுத்தவர் வைகோ என்று தனது தந்தை பற்றியும் துரை உருகினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications