மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடி டீமுக்கு விபூதி அடித்த பாஜக.. ‘என்ன சார்’.. எச்.ராஜா ஒரே பூரிப்பு - மதுரை மாஜிகளுக்கு ஷாக்!

Google Oneindia Tamil News

மதுரை : அதிமுகவில் இருந்து 1000 பேர், அதுவும் எடப்பாடி பழனிசாமி அணியினர் பாஜகவில் இணைந்துள்ளதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.

அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மாற்றுக்கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் இருந்து இன்று அதிமுகவினர் 1000 பேர் பாஜகவில் இணைந்துள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.

மதுரையின் முன்னாள் அமைச்சர்கள் இருவரும் இதுபற்றி கட்சியினரிடம் விசாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ரொம்ப நல்லவர்.. அந்த 2 பேர் மேல் ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன் எடுக்கணும்.. வெடித்த எச்.ராஜா! முதல்வர் ஸ்டாலின் ரொம்ப நல்லவர்.. அந்த 2 பேர் மேல் ஸ்ட்ரிக்ட் ஆக்‌ஷன் எடுக்கணும்.. வெடித்த எச்.ராஜா!

அதிமுக உட்கட்சி குழப்பம்

அதிமுக உட்கட்சி குழப்பம்

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட மோதலால், அதிமுகவினர் இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். இரு அணிகளில் யாருடைய கை ஓங்குகிறதோ, அந்தப் பக்கம், எதிர் முகாமில் இருப்பவர்கள் தாவுவதும் தொடர்கதையாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.

 திமுக + பாஜக

திமுக + பாஜக

கடந்த 4 மாதங்களாக நிலவி வரும் இந்த குழப்பத்திற்கு மத்தியில் அதிமுக நிர்வாகிகள் பலர் மாற்றுக்கட்சிகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். அந்தவகையில், சில வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர். அதோடு, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர்.

எச்.ராஜா

எச்.ராஜா

இந்நிலையில், மதுரையில் இன்று அதிமுகவில் இருந்து சுமார் 1000 பேர் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் எச்.ராஜா. அப்போது பாஜக மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பாஜகவுக்கு பாய்ந்த அதிமுகவினர்

பாஜகவுக்கு பாய்ந்த அதிமுகவினர்

அப்போது, அதிமுகவில் இருந்து 1000 பேர் பாஜகவில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு புதிதாக வந்துள்ள நிர்வாகிகள், எச்.ராஜாவுக்கு சால்வை அணிவித்து பாஜகவில் இணைந்தனர். எச்.ராஜாவும் அவர்களுக்கு காவித்துண்டு போர்த்தி வரவேற்றார்.

எச்.ராஜா சிரிப்பு

எச்.ராஜா சிரிப்பு

அதிமுகவில் இருந்து ஆயிரம் பேர் பாஜகவில் இணைவதாக அறிவித்த எச்.ராஜா, சிரித்தபடியே, 'இவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள்' என்றார். அங்கிருந்த செய்தியாளர்கள், "என்ன சார், கூட்டணி கட்சியில் இருந்தே தூக்குறீங்களே" என கமெண்ட் அடிக்க, எச்.ராஜா பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தபடி எழுந்தார்.

ஈபிஎஸ் டீம் ஷாக்

ஈபிஎஸ் டீம் ஷாக்

எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தான் மதுரைக்கு வந்து பலம் காட்டிவிட்டுச் சென்றார். அவரது ஆதரவாளர்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ என முன்னாள் மாஜிக்கள் ஓபிஎஸ் தரப்பை விளாசி வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் இருந்து 1000 அதிமுகவினர் பாஜகவில் இணைந்த தகவல், ஈபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக, லோக்கல் மாஜிக்கள் விசாரித்து வருகின்றனராம்.

English summary
Amidst the ongoing OPS-EPS conflict in ADMK, AIADMK executives and volunteers are jumping to alternative parties. 1000 cadres from Edappadi Palaniswami's team joined BJP today in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X