எடப்பாடி டெல்லி போனது என்ன உலக அதிசயமா? மதுரையில் திடீரென டென்ஷனான ஓபிஎஸ்!
மதுரை: எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது என்ன உலக அதிசயமா என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆதரவாளர்கள் மாற்று கட்சியில் இணைந்தது குறித்த கேள்விக்கும், கூட்டணி நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் ஓபிஎஸ் சிரித்து கொண்டே நகர்ந்து சென்றார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியை விரிவுபடுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. நேற்றைய தினம் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக இணைந்த சூழலில், புதிய தமிழகம் கட்சியும் அதிமுக கூட்டணியை நோக்கி நெருங்கி இருக்கிறது. நாளை தேமுதிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே பாமக கூட்டணியை உறுதி செய்த கையோடு, எடப்பாடி பழனிசாமி டெல்லியில் முகாமிட்டுள்ளார். நேற்றிரவு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்க்கும் வாய்ப்பு குறித்து பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் நேற்றைய தினம் ஓபிஎஸ் அளித்த பேட்டி பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ஓபிஎஸ் வழக்கமாக எந்த கேள்விக்கும் முகம் சுளிக்காமல் உற்சாகமாக பதில் அளிப்பார். அதேபோல் தங்களின் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்தும் தெளிவாக சொல்லிவிட்டு செல்வார். ஆனால் நேற்று செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியாமல் தடுமாறினார்.
ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் தொடர்பான கேள்விக்கு, அது என்ன உலக அதிசயமா என்று கோபமாக கேள்வி எழுப்பினார். பின்னர் நீங்கள் டெல்லி செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, நல்ல வேளை.. அமெரிக்கா செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கவில்லை என்று தனக்கு தானே கேள்வி எழுப்பி சிரித்து விலகி சென்றார்.
அதேபோல் மனோஜ் பாண்டியனை தொடர்ந்து ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்திருக்கிறாரே என்ற கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. அமமுக, தேமுதிக உள்ளிட்டோருடன் அதிமுக பேசி வருவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கும், மறைமுகமாக பேசுகிறார்கள் போல என்று பதில் அளித்து சென்றார்.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications