EPFO.. நீங்குகிறது சிக்கல்.. இந்த 6 மாவட்டங்களுக்கும் முக்கிய செய்தி.. 27ம் தேதி என்ன நடக்க போகிறது
மதுரை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்பட 6 மாவட்டங்களில் குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் குறித்து பதில் பெறலாம்.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இயங்குகிறது. மதுரை அதன் மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களில் நிதி உங்கள் அருகில் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் 27-ந்தேதி நடைபெறுகிறது. இதன்படி இந்த மாதம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை மண்டல ஆணையாளர் அமியகாந்த் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள், சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற நிறுவனங்களில் உள்ள பி.எப்.டிரஸ்ட் சந்தாதாரர்களின் வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. முகாமில் பங்கேற்பவர்கள் t.ly/nPTt என்ற இணையதள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவு செய்த பின்னரே இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம்.
மதுரை மாவட்டத்துக்கு திருமங்கலம் பி.கே.என். மேல்நிைலப்பள்ளியிலும், தேனி மாவட்டத்துக்கு கம்பம் ஸ்ரீசக்தி விநாயகா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், சிவகங்கை மாவட்டத்துக்கு தேவகோட்டை ஆர்ச் அருகில் வீரா மருத்துவமனையிலும் நடைபெறும்.

விருதுநகர் மாவட்டத்துக்கு விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின்பின்புறம் கே.வி.எஸ்.நடுநிலைப்பள்ளியிலும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பரமக்குடி கணபதி செட்டியார் வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியிலும், திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்திலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications