Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கீழ இறங்குங்க.. செல்லூர் ராஜூவிடம் சீறிய எடப்பாடி! அவரே சொன்ன விளக்கம்! ஆனால் உண்மை என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கீழடிக்கு சென்ற போது தன்னுடைய காரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஏற்ற மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில்சீனியர்களுக்கு மரியாதை இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், என்ன நடந்தது என்பது குறித்து செல்லூர் ராஜூவே விளக்கம் அளித்துள்ளார். ஆனாலும், செல்லூரார் மீது எடப்பாடி கோபத்தில் இருப்பது உண்மை தான் என்கின்றனர் மதுரை அதிமுகவினர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு கிட்டத்தட்ட பத்து மாதங்களை இருக்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி இருக்கிறார்.

கடந்த மாதம் கோவையில் 'தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம்' என்ற தலைப்பில் இந்த பிரச்சார சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். கோவை, விழுப்புரம், அரியலூர் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சுற்றுப்பயணம் சிவகங்கை சமீபத்தில் நடந்தது.

EPS Refuses Sellur Raju

எடப்பாடி பழனிசாமி

இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பாஜக கட்சித் தலைவர்கள் சிலரும் கலந்து கொண்டனர் .தேர்தல் பிரச்சாரத்தோடு வணிகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரை சந்தித்து வருகிறார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்துக்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார்.

செல்லூர் ராஜூ

அங்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள்களை பார்வையிட்டார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி, மதுரையிலியிருந்து சிவகங்கைக்கு காரில் புறப்பட்டார். அப்போது, எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஏற்ற மறுத்ததாக வீடியோக்கள் வெளியாகியிருந்தன. அந்த காரில் ஏற்கனவே விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இருந்த நிலையில், செல்லூர் ராஜூவை அனுமதிக்கவில்லை என கூறப்பட்டது.

வைரல் வீடியோ

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோக்களில், எடப்பாடி பழனிசாமி, முன் இருக்கையில் அமர்ந்திருந்த காரில், செல்லூர் ராஜூ ஏறுவதற்குத் தயாரானார். ஆனால் அதனைப் பார்த்த பழனிசாமி, வேண்டாம் வேண்டாம், வேறு காரில் செல்லுங்கள் என்று கூறினார். இந்த வீடியோ வைரலாகி, கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பழனிசாமி, செல்லூர் ராஜூவை தன்னுடைய காரில் ஏற்ற மறுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

செல்லூர் ராஜூ மீது அதிருப்தி

மேலும், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், உண்மை அவ்வாறு இல்லை என்றும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றதாக செல்லூர் ராஜுவே விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய் பிரிவில் இருந்து இசட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு அதிகரித்துள்ள காரணத்தால், எடப்பாடி பழனிசாமி இருந்த காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் தான், தன்னை காரில் ஏற வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி கோபம்

வேறு காரில் வருமாறும் கூறியதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஏற்கனவே காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால் தான் தன்னை காரில் ஏற்றவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் செல்லூர் ராஜூ மீது எடப்பாடி பழனிச்சாமி ஆத்திரத்தில் இருப்பது உண்மைதான் எனவும் சமீபகாலமாக அவரது பேச்சு நடவடிக்கைகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது என்கின்றனர். குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, ஓபிஎஸ் யார் தெரியுமா? என செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ சீறியது, எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் அதன் காரணமாகவே காரில் அவருக்கு இடம் தரவில்லை என்கின்றனர் மதுரை அதிமுகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+