Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் விவகாரம்.. பாபர் மசூதியை போல சித்தரிக்க முயற்சி! ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இன்று இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இருப்பினும், இதற்கு போலீசார் அனுமதி தர மறுத்திருந்த நிலையில், இது குறித்து வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த விவகாரத்தை பாபர் மசூதி பிரச்சினை போல் மாறிவிடக்கூடாது என்பதற்காகவே அனுமதி மறுத்ததாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் தர்காவும் உள்ளன. அங்கு சிக்கந்தர் தர்கா சார்பாகக் கந்தூரி விழா சமீபத்தில் நடத்தப்பட்டது..

thirupparangundram hindu front

வழக்கு:

இருப்பினும், சில இந்து அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்திருந்தனர். இது தொடர்பாக பல்வேறு கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இருப்பினும், இந்த போராட்டத்தால் மத ரீதியிலான பிரச்சினை என்று கூறி போலீசார் முதலில் அனுமதி மறுத்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்ட சூழலில், மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.

இந்த 144 தடை உத்தரவை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.. இதை அவசர வழக்காக ஏற்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு விசாரித்தது. தற்போது தை பூச விழா நடந்து வரும் சூழலில், ஆர்ப்பாட்டம் நடத்தினால் தேவையற்ற மத பிரச்சினை ஏற்படும் என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

பாபர் மசூதி பிரச்சினை போல:

மேலும், இந்த பிரச்சினையைச் சிலர் திட்டமிட்டு அயோத்தி அல்லது பாபர் மசூதி பிரச்சினை போல் சித்தரிக்க முயல்வதாகவும் இதன் காரணமாகவே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேநேரம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தைப்பூசத் திருவிழாவுக்குப் பக்தர்கள் வரும் சூழலில் இந்த 144 தடை உத்தரவால் பக்தர்கள் சிரமப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும், ஒரு குறிப்பிட்ட போராட்டத்திற்காக மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தடை உத்தரவை ரத்து செய்து, போராட்டத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.

கேள்வி:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆர்ப்பாட்டத்திற்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என்று கேட்டனர். மேலும், 144 தடை உத்தரவு பிறப்பித்தால் எந்த நாளில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அரசு தரப்பில், பிப்ரவரி 19 அல்லது 20ஆம் தேதிகளில் வேறு இடத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அனுமதி:

இருப்பினும், , மாற்று இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் தயார் எனச் சொன்ன மனுதாரர் தரப்பு, இருப்பினும், இன்றே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.. இந்த கோரிக்கையை ஏற்ற அரசு தரப்பு, மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதி வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், பழங்காநத்தம் பகுதியிலேயே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியம் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், இன்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் மதுரை அருகே பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+