கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணா.. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மீது 2 பிரிவுகளில் வழக்கு
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் உள்பட 58 பேர் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் தான் உசிலம்பட்டியில் 58 கிராம பாசன கால்வாய்களில் ஒருபோக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதிகளின் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்னும் நடவடிக்கை என்பது எடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர். அதோடு விவசாய பணிகளை தொடங்க முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தான் 58 கிராம பாசன கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மதுரை ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்வி உதயகுமார் சென்றார். அதிமுக நிர்வாகிகளுடன் சென்றார்.
இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, ‛‛வழக்கமாக செப்டம்பர் மாதம் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக பாசன விவசாயதிதற்காக மனு அளிக்க வந்துள்ளோம்'' எனக்கூறினார். மேலும் மாவட்ட ஆட்சியர் தங்களின் மனுக்களை நேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் மாவட்ட ஆட்சியர் வரவில்லை.
இதையடுத்து ஆர்பி உதயக்குமார் உள்ளிட்டிவர்கள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையினர் கலைந்து செல்ல கூறினார். ஆனால் அவர்கள் மறுப்பு தெரிவித்து தர்ணாவை தொடர்ந்தனர்.
இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் ஆர்பி உதயக்குமார் உள்பட 56 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனுமதியின்றி கூடியது, வழியை மறித்து போராடியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications