அண்ணாமலை பயணம்..பாஜகவுக்கு விடுதலை! 3 ஆண்டுகளில் உதயநிதிக்கு மெகா வளர்ச்சி..விடாமல் தாக்கும் அதிமுக!
மதுரை: அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் முதலீடாக ஈர்த்தது 900 கோடி ஆனால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அபதாரம் கட்டுவது 908 கோடி எனவும், உள்ளூரில் மூடிய சர்க்கரை ஆலையை திறக்காமல் வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கிறேன் என்பது நியாயமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம்,சோழவந்தான் தொகுதி,மேட்டுப்பட்டியில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி அப்பகுதி மக்கள், விவசாயிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்ட கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,” தேசிய சர்க்கரை ஆலையை திறக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தமிழகத்தில் மிகப்பெரிய ஆலையாக திகழ்கிறது. லாபம் ஈட்டும் ஆலையாக பார்க்க கூடாது. விவசாயிகளின் வாழ்வை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசு விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட கூடாது.
இங்கு மூடிய சர்க்கரை ஆலையை திறந்தால் தானே வேலை வாய்ப்பு கிடைக்கும் அதை விடுத்து மூதலீட்டை ஈர்த்து தமிழ்நாட்டை வளர்க்க போகிறேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் இங்கே ஆலையை திறக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் இதை பரிசீலனை செய்வாரா? பாஜக தலைமையே அண்ணாமலையை எப்படி அனுப்பி வைப்பது என தெரியாமல் தவித்தனர்.
திமுகவை சேர்ந்த ஜெகத்ரட்சகன் அமலாக்காத்துறை அபராதம் மட்டுமே 908 கோடி ரூபாயாகும். அமெரிக்கா முதலீட்டில் அரசு 900 கோடி பெறுகிறது. ஆனால் திமுக எம்.பிக்கு 908 கோடி அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வருவாய், கஜானா கவலைகிடமாக உள்ளது. திமுகவினர் கஜானா அதிகரித்து உள்ளது. மேலும் ஜெகத்ரட்சகன் ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல் விதியை மீறி சிங்கப்பூர் இலங்கை போன்ற நாடுகளில் முதலீடு செய்ததாக செய்தி வருகிறது.
இங்கு மூடிய சர்க்கரை ஆலையை திறந்தால் தானே வேலை வாய்ப்பு கிடைக்கும் அதை விடுத்து மூதலீட்டை ஈர்த்து மிழ்நாட்டை வளர்க்க போறேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் இங்கே ஆலையை திறக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் இதை பரிசீலனை செய்வாரா? பாஜக தலைமையே அண்ணாமலையை எப்படி அனுப்பி வைப்பது என தெரியாமல் தவித்தனர்.
அண்ணாமலை வெளிநாட்டு பயணத்தால் தமிழகம் அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. பாஜகவில் தற்போது பொறுப்புக்கு வந்துள்ளவர்கள் திறமை, அனுபவம், பண்பாடுமிக்கவர்கள் ஆவார்கள். அண்ணாமலை வெளிநாட்டு பயணத்தால் பாஜக தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.
திரைப்படத்தில் ஒட்டுமொத்த வாழ்க்கையின் வளர்ச்சியை 3 மணி நேரத்திற்குள் காட்டுவார்கள். அதை இன்றைக்கு நேரில் பார்க்கிறோம். சினிமாவை போல 3 ஆண்டுகளில் அமைச்சர் உதயநிதி மெகா வளர்ச்சியடைந்து உள்ளார். நடிகர், எம்.எல்.ஏ, அமைச்சர் என செயல்படும் உதயநிதி தற்போது அறிவிக்கப்படாத முதலமைச்சராக செயல்படுகிறார். இந்திய அரசியல் வரலாற்றில் அமைச்சர் உதயநிதி போல யாரும் வளர்ச்சி பெறவில்லை. உதயநிதி வளர்ச்சி அவரது உழைப்புக்கு கிடைத்ததா? தந்தை, தாத்தா உழைப்புக்கு கிடைத்ததா? என விளக்க வேண்டும்" என கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications