Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாயால் வடை சுடும் ஸ்டாலின்..கொலைகளால் ஸ்தம்பித்த தமிழகம்! ட்ரான்ஸ்ஃபர் கூடாது.. RB உதயகுமார் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

மதுரை: உயர் அதிகாரிகள் இடமாற்றத்தால் பிரச்சனை தீர்ந்து விடாது எனவும், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமல், சுதந்திரமாக செயல்படவிட்டால் தான் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட முடியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.

SAY NO TO DRUGS - SAY NO TO DMK என்ற தலைப்பில் திமுக ஆட்சி நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் குறித்தும், RESIGN STALIN என்ற தலைப்பில் திமுக ஆட்சியில் நடைபெற்ற கள்ளச்சாராயம் குறித்தும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

RB Udayakumar Mk Stalin DMK

அந்த வகையில், அம்மா பேரவை மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் திருமங்கலம் இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர்," கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் பலியான சம்பவம் நடைபெற்றது. இது திமுக ஆட்சியின் அலட்சிய போக்கே காரணமாகும். ஏற்கனவே மரக்காணத்தில் 22 பேர் பலியான சம்பவத்தில் பாடம் கற்றுக்கொண்டு முதலமைச்சர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் ஆனால் கோட்டை விட்டுவிட்டார். தற்பொழுது கூட விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள குமாரமங்கலத்தில் கள்ளச்சாராயத்தால் ஒருவர் பலி ரெண்டு பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

கள்ளச்சாராயத்தை இன்னும் ஒழிக்க முடியவில்லை. கள்ளச்சாராயத்தை ஒழித்து விடுவேன் என்று முதலமைச்சர் வாயால் வடை சுடுவது போல் சொல்லாமல், செய்து காட்ட வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்தாண்டு சட்டசபையில் உள்துறை மானிய கோரிக்கையில் இரண்டரை மணி நேரம் எடப்பாடியார் ஆதாரத்துடன் சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்துபேசினார். முதலமைச்சர் அன்றைக்கு அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கஞ்சாவை ஒழிக்க என்று திட்டத்தை அறிவித்தார்கள்.

ஆனால் கட்டுப்படுத்தியதாக தெரியவில்லை. கள்ளச்சாரய சம்பவம் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. சட்ட ஒழுங்கை நிலை நாட்ட தான் காவல்துறை உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை என செய்திகள் வராத நாளே இல்லை. ஆனால் இன்றைக்கு காவல்துறை விஐபி தரவரிசை போல 4000 ரவுடிகளை ஏ,பி,சி, என்று தரம் பிரித்து பட்டியல் வெளியிடுகிறார்கள். உயர் அதிகாரிகள் இடமாற்றத்தால் பிரச்சனை தீர்ந்து விடாது.

காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமல் சுதந்திரமாக செயல்படவிட்டால் சட்ட ஒழுங்கு நிலைநாட்ட முடியும். மதுரையில் நகைக்காக மூன்று மூதாட்டிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதுவரை துப்பு துலக்கவில்லை. தமிழகத்தில் கனிமவள கொள்ளை நடைபெற்று இருக்கிறது. இந்த நிமிடம் வரை தமிழகத்தின் முதலமைச்சரோ, அரசோ வாய் திறக்கவில்லை. அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இதுகுறித்து அபிடவிட் தாக்கல் செய்துள்ளது. ஐந்து மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
நடைபெற்றுள்ளது.

தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா முதலமைச்சரை, தமிழக முதலமைச்சர் கண்டிக்காமல் மௌனம் விரதம் இருந்து வருகிறார். இனி மௌனம் விரதம் இருக்காமல். வாயால் வடை சுடாமல் முதலமைச்சர் வாய் திறக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்று தீர்க்கதரிசனமாக எடப்பாடி பழனிசாமி கூறினார். அதேபோலத்தான் அனைத்து அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு வாக்காளர்களை விலை பேசினார்கள். அங்கே ஜனநாயகம் இல்லை, பணநாயகம் தான் இருந்தது" என பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+