Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'என் தாயே தடுத்தாலும், ஆண்டவனே தடுத்தாலும்'.. ஓ பன்னீர்செல்வம் குறித்து செல்லூர் ராஜூ ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

மதுரை : என் தாயே தடுத்தாலும், ஆண்டவனே தடுத்தாலும் இயக்கத்தை இழிவாக பேசக்கூடிய யாராக இருந்தாலும் நான் இந்த நேரத்தில் சொல்கிறேன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என ஓ பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக பதிலளித்தார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய விளாங்குடி பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து பேருந்து நிலைய மந்தைத் திடலில் மேற்கூரை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியின் போது கூறுகையில், "முதலமைச்சர் ஸ்டாலின் மதுரைக்கு வருவது மகிழ்ச்சியான விஷயம்தான், மதுரைக்கு பல திட்டங்களை திறந்து வைப்பதற்காக வந்திருக்கிறார்.

Former AIADMK Minister Sellur Raju responds to a question about O Panneerselvam join with dmk

நான் அன்போடு கேட்டுக் கொள்வது என்னவென்றால் முதலமைச்சர் அவர்கள் கடந்த முறை வரும்போது முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை இரண்டு லட்சத்து 57 ஆயிரம் குடும்பங்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் கொடுப்பதாக திட்டத்தை திறந்து வைத்தார். அந்தத் திட்டம் மக்களுக்கு சரிவர செயல்படுத்தப்படவில்லை.

முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள்

அதை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும் 37 வார்டுகளுக்கு மேல் இன்னும் குடிநீர் வழங்கப்படவில்லை. முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டம் கால தாமதமாக தற்போது முடிக்கப்பட்டு முறையாக எல்லாருக்கும் தண்ணீர் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஆய்வு செய்ய வேண்டும்

மதுரையில் எங்கு பார்த்தாலும் சாலைகள் சரிவர இல்லை. தெருக்களில் கழிவு நீர் ஓடுகிறது. பழைய வார்டு பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கழிவுநீர் கலந்து வருகிறது. மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது கோடைகாலமாக இருப்பதால் முதலமைச்சரும் அந்த அதிகாரிகளை கூப்பிட்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதே மாதிரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய திட்டங்கள் இதுவரை முடிக்காமல் இருக்கிறது. இந்த ஆட்சி வந்து ஐந்து வருடமாகிறது இன்னும் அந்த திட்டங்கள் முடிக்கப்படவில்லை. அதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

மதுரை மாநகராட்சி

இதை காட்டிலும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மதுரை மக்களுக்கு மாநகராட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு மேயர், மண்டல தலைவர் தேர்ந்தெடுத்தீர்கள், 69 மாமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் கடந்த ஐந்து மாதங்களாக மாநகராட்சியில் எந்த திட்டங்களும் பணிகளும் நடக்கவில்லை. மாநகராட்சியில் மக்கள் பிரச்சனையை பேசுவதற்கு மாமன்ற கூட்டம் நடத்தப்படாமல், மக்களின் தேவைகளை பேசுவதற்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு மறுக்கப்படுகிறது. மாமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை, அதையும் முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும்.

3 லட்சம் கட்டிடங்கள்

உயர்நீதிமன்றத்தால் மதுரை மாநகராட்சி ஊழலை விசாரிப்பதற்கு தென்மண்டல ஐஜி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள், சொன்னதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு, ஒரே வாரத்தில் 28 கோடி ரூபாய் ஊழல் கண்டறியப்பட்டது. அதன்படி மண்டல தலைவர்கள்,மேயர், யாரும் இல்லாததால் மக்கள் பணிகள் எதுவுமே நடக்கவில்லை. மூன்று லட்சம் கட்டிடங்கள் வணிக கட்டிடங்கள் இருக்கிறது, முறையாக வீட்டு வரி வணிக வரி விதிக்கப்படாமல் மண்டலத்தில் அவர்கள் ஆட்டையை போட்டு உள்ளனர். அதை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். மக்களுக்கு விதிக்கப்பட்ட வரியின் அடிப்படையில் மக்களுக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை.


முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டம்

முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்டம் குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருந்தபோது புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவின்போது மதுரை மக்களுக்கு அறிவித்தார். 40 30 ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் இருந்தது. எனவே இது திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்து மீண்டும் மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதற்கும், அதேபோல் சாலைகள், சாக்கடைகள் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

வைகை அணையில் கழிவு

கடந்த முறை முதல்வர் மதுரைக்கு வரும்போது பந்தல்குடி வாய்க்கால் சரி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தேன், அதேபோல் வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. வையாறு அசுத்தம் ஏற்படுகிறது திரவும் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.அதனை முதல்வர் உடனடியாக ஆய்வு செய்து பணிகள் நடைபெற்றது. ஆனால் தடுப்புசுவர் எழுப்பும்போது வாய்க்கால் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டனர். இதுதான் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதனை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட வேண்டும்.

இன்று வைகை ஆறு மாசுபட்டு இருக்கிறது. புராண காலங்களில் இருந்து இது பேசப்படக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க வைகை நதி இன்று கழிவு நீர் கலப்பதாக இருக்கிறது. இதனையும் முதல்வர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ பன்னீர்செல்வம் குறித்து ஆவேசம்

ஓ பன்னீர்செல்வம் குறித்த கேட்கிறீர்கள்.. அதிமுக விட்டு அவர் சென்று விட்டார், சென்றவர்கள் என்ன பேசினாலும் அது எனக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை. மக்கள் பார்த்துட்டு இருக்காங்க.. அதிமுக தொண்டரும் பார்த்துட்டு இருக்காங்க, அதிமுகவில் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரிதான் என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீப காலமாக ஓபிஎஸ், திமுகவிற்கு ஆதரவாக பேசி வருகிறார்.

சாதாரண டீக்கடை வைத்திருந்தவரை சேர்மன், சட்டமன்ற உறுப்பினர், முதல்வர் என அழகு பார்த்தது அதிமுக கட்சிதான். பலமுறை நிதி அமைச்சர் அழகு பார்த்தது அதிமுக தான். இப்போது இந்த கட்சிக்கு குரல் கொடுக்காமல் இப்படி பேசுவதற்கு எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் எம்எல்ஏ ஐயப்பன் அவரா பேசுவது போல் தெரியவில்லை , அங்கு இருக்கிறவர்கள் சொல்லி பேசுகிறார்.

திமுக எதிர்ப்பு ரத்தம்

ஓபிஎஸ் இடம் தற்போது குறிப்பிட்ட ஒரு நான்கு, ஐந்து பேர் தான் இருக்கிறார்கள். அவர்களும் நம்மிடம் வந்து விடுவார்கள். தற்போது தான் அவரின் எண்ணம், பாதை அவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் அவரிடம் இருக்கும் நான்கு , ஐந்து நபர்களும் தற்போது அதிமுகவுக்கு வந்துவிடுவர். அதிமுக கட்சி திமுக எதிர்ப்பு என்பது எங்கள் ரத்தத்தில் ஓடுகிறது. இன்று இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் வகித்த பதவி அதிமுகவால் தரப்பட்டது. உண்மையான அதிமுக தொண்டன் இப்படி பேச மாட்டார்.

பன்னீர் வளர்ந்தது எப்படி

அதிமுக கட்சி இல்லை என்றால் எப்படி இவர்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருக்க முடியும். மக்களிடையே அடையாளம் காட்டி இருக்க முடியும். ஓபிஎஸ் யார் என்பது எப்படி தெரியும் அவரை இந்த அளவுக்கு தெரிய வைத்தது அதிமுக கட்சிதான் செங்கோட்டையனை வளர்த்தது அதிமுக, பன்னீர்செல்வத்தை வளர்த்தது அதிமுக, எப்படி தற்போது இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

அதிமுகவில் தான் இருப்பேன்

செல்லூர் ராஜு யார் என்று, யாருக்கு என்னை எப்படி தெரியும், இந்த கட்சிதானே என்னை அறிமுகப்படுத்தியது. தற்போது எவ்வளவு தூரம் வளர்ந்து இருக்கிறேன் என்றால் அது அதிமுகவில் இருப்பதினால் தான். மூன்று முறை என்னை ஜெயிக்க வைத்தீர்கள் இரண்டு முறை அமைச்சராக இருந்தேன். அது அதிமுக கட்சியினால் தான் ஏற்பட்டது. என் உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன் என கூறுவேன்.

தாயே தடுத்தாலும்

என் தாயே தடுத்தாலும், ஆண்டவனே தடுத்தாலும் இயக்கத்தை இழிவாக பேசக்கூடிய யாராக இருந்தாலும் நான் இந்த நேரத்தில் சொல்கிறேன் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். இது கட்சியில் உள்ள அனைவரின் பிரதிபலிப்பாக நான் சொல்கிறேன்.

தேமுதிக குறித்து செல்லூர் ராஜூ

தேமுதிக அதிமுக கூட்டணிக்கு வரும் என்று நீங்கள் காத்திருந்தீர்கள் என கேட்கிறீர்கள்.. நாங்க எப்ப காத்திருந்தோம்.. எப்ப சொன்னோம்.. எங்க பொதுச் செயலாளர் சொன்னாரா, இல்லை எங்கள் அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் யாரேனும் சொன்னார்களா? எப்போதும் சொல்றோம் இப்போது சொல்கிறேன் கூட்டணி என்பது தேர்தல் அறிவித்த பிறகு எந்தெந்த கட்சி எந்தெந்த தொகுதியில் நிற்கிறது என்று முடிவு செய்வது இல்லை அதுவரைக்கும் கட்சிகள் எங்கள் தோழமைக் கட்சிகள் எந்த கூட்டணியும் மாறலாம், மாறுவார்கள் அதை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் திமுக நடக்கிற சம்பவத்தை யாரேனும் முதல்வரிடம் சென்று கேள்வி கேட்க முடியுமா ? காங்கிரஸ் எம்பி இப்படி பேசுகிறார் என முதல்வரிடம் சென்று உங்களால் கேட்க முடியுமா? " இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+