ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் மோசடி.. தலைமறைவான கும்பல்.. நத்தம் அருகே முகவர்கள் வீடுகளில் கல்வீச்சு

Subscribe to Oneindia Tamil

மதுரை: FQL டிரேடிங் என்ற பெயரில் பணம் கட்டினால், இரட்டிப்பாக தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி அப்பாவி பொதுமக்களிடம், பல கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து தலைமறைவாகியுள்ளனர். இந்த நிறுவனத்துக்கு முகவர்களாகச் செயல்பட்டவர்கள் வீடுகள் மீது பாதிக்கப்பட்டவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் கட்டையம்பட்டி பகுதியில் FQL என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 45 நாட்களில் இருந்து 65 நாட்களுக்குள் ஒரு லட்சம் ரூபாய், ஒரு லட்சம் செலுத்தினால் 2 லட்சம் என லாபம் வரும் எனக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. FQL டிரேடிங், VG டிரேடிங் என்ற பெயரில் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி ரூ.150 கோடி மோசடி செய்ததாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் புகார் எழுந்துள்ளது.

FQL Trading Scam

காசம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி அனிதா, விஜய், தினேஷ் ஆகியோர் முகவர்களாக செயல்பட்டு வந்தனர். ரெட்டியபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, கவராயம்பட்டி, சேத்தம்பட்டி, லிங்கவாடி, சாத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் கட்டையம்பட்டியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் மூடப்பட்டது. முகவர்கள் தப்பி ஓடியதால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். தாங்கள் பணத்தை ஏமாற்றி விட்டதாக 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அந்த நிறுவனத்தின் முகவர்கள் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தங்களிடமிருந்து வாங்கிய பணம் திரும்ப வேண்டும் எனத் தெரிவித்த அவர்கள் முகவர்களை கைது செய்ய வலியுறுத்தினர். மேலும் சிலர் ஆத்திரத்தில் கற்களை எடுத்து முகவர்கள் வீடுகளை அடித்து நொறுக்கினர். உடனடியாக அங்கு வந்த தாசில்தார் மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணைக்காக முகவர்களை அழைத்துச் சென்றபோது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முகவர்கள் மீதும் அவர்களை அழைத்துச் சென்ற காவலர்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் இருந்து செயல்பட்ட இந்த நிறுவனத்தை தவெக நிர்வாகிகள் முத்துப்பாண்டி மற்றும் ரஞ்சித் ஆகியோர் நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் தலைமறைவாகி உள்ளதால், அவர்களின் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆன்லைன் மோசடி தொடர்பாக மதுரை எஸ்.பி அலுவலகத்தில் இதுவரை 1,500க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+