இலவசமாக மடிக்கணினி, ஆடு,மாடு கொடுக்கிறார்கள்.. தண்ணீரை விற்கிறார்கள்.. சீமான் காட்டம்
Recommended Video
திருப்பரங்குன்றம்: இரண்டு திராவிட கட்சிகளும் ஆட்சியை விட்டு போனால், இந்த நாடு நன்றாக இருக்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரேவதியை ஆதரித்து, அவனியாபுரத்தில் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மடிக்கணினி, ஆடு, மாடு உள்ளிட்டவற்றை தற்போதைய அரசு இலவசமாக கொடுக்கிறது. ஆனால் தண்ணீரை விற்கிறது. இயற்கை வளங்களான மலை, மணல் திருடப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் 890 பள்ளிகளை மூவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்த சீமான், 850 மதுக் கடைகளைத் திறக்க அரசு திட்டமிட்டிருக்கிறது என்றார். பள்ளியை மூடிவிட்டு, மதுகடைகயை திறக்கும் அவலவம் ஏற்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தால்
கல்வி, மருத்துவம், குடிநீர், மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்தும் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், தரமான கல்வி, தரமான மருத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

மாற்றம் அவசியம்
மடிக்கணினி, ஆடு, மாடு உள்ளிட்டவற்றை தற்போதைய அரசு இலவசமாக கொடுக்கிறது. ஆனால் தண்ணீரை விற்கிறது இயற்கை வளங்களான மலை, மணல் திருடப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார். இந்த நாடு நன்றாக இருக்க வேண்டுமானால், இரு திராவிடக் கட்சிகளும் ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டும். அனைவரும் மாற்றம் என்ற செயலில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வேலைவாய்ப்பு
சாலைப் பணிக்கு 400 க்கும் மேற்பட்ட பொறியியல் படித்த இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக சட்டப்பேரவையில் பேசுகிறார்கள். அந்த அளவிற்கு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லாத நிலை உள்ளது.

விவசாயி சின்னம்
வாக்களிக்க செல்லும் போது, என்ன சின்னம் என்று தெரியாமல் மங்கலாக இரட்டை கரும்புடன் கூடிய விவசாயி சின்னத்தை அச்சிட்டு இருப்பார்கள் அதில் வாக்களியுங்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications