"திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை".. பிரதமர் மோடிக்கு எதிராக மதுரையில் 'Go Back Modi' போஸ்டர்!
மதுரை: பிரதமர் மோடி இன்று மதுரை வருகை தரவுள்ள நிலையில், மதுரை மாநகரம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் 'Go Back Modi' மற்றும் "மத ரீதியான மூளைச்சலவை வேண்டாம்" போன்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. "திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை" என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரமாண்ட மாநாடு இன்று மாலை மதுரையில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரி செல்கிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பின்னர் தஞ்சாவூர் வந்து, இன்று மதியம் ஹெலிகாப்டரில் மதுரை வருகிறார். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
புதுச்சேரி மற்றும் தஞ்சாவூர் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு இன்று பிற்பகல் 2:45 மணிக்கு பிரதமர் வருகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று ரூபாய் 4,400 கோடி மதிப்பிலான அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்க உள்ளார். அவருடன் கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி மதுரைக்கு இன்று வரவுள்ள நிலையில் மதுரை மாநகரம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் 'Go back modi' போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "தமிழ்நாடு ஒற்றுமையாக நிற்கிறது, மத ரீதியான மூளைச் சலவை வேண்டாம், திருப்பரங்குன்றம் உங்களை வரவேற்கவில்லை" உள்ளிட்ட வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications