மதுரைக்காரர்களே.. உங்களுக்கு வந்தாச்சு தூள் அறிவிப்பு.. வேலையும் ஆரம்பிச்சாச்சு.. என்னனு பாருங்களேன்
மதுரை: மதுரைவாசிகளுக்கு இன்ப செய்தி ஒன்று வந்துள்ளது.. அதன்படி, மதுரையில் மேலும் 2 மெட்ரோ வழித்தடங்கள் வரப்போகிறதாம்.. இதற்கான முயற்சிகளும் துவங்கிஉள்ளன.
மக்களின் பயன்பாட்டிற்காக, பல்வேறு அதிரடிகளை செய்துவருகிறது மெட்ரோ நிறுவனம்.. அந்தவகையில், சென்னையை எடுத்துக் கொண்டால், சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் தற்போது உள்ளது.
தொடர்ந்து, மேலும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.. 119 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 61 ஆயிரத்து 800 கோடி மதிப்பில் இந்த திட்டங்களை நடைபெற்று வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறை: 2026-ம் ஆண்டில் 3 வழித்தடங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, மெட்ரோ ரயில் திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து மெட்ரோ நிர்வாகம் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.. இப்படி சென்னை மெட்ரோ பல முன்னெடுப்புகளை எடுத்து வரும்நிலையில், மதுரையும் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது. மதுரையில் மேலும் 2 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் வரப்போகிறதாம்.
திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஆர்வி அசோசியேஷன் இறங்கி உள்ளது.. இதில், முதற்கட்டமாக 76 இடங்களில் மண் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டும் வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், சென்னையை சேர்ந்த ஒருவர் சிஎம்ஆர்எல்க்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சூப்பரான பதில் ஒன்று கிடைத்துள்ளது.
திருமங்கலம் : அதன்படி, 'திருமங்கலம் - ஒத்தக்கடை வழித்தடம் தவிர, மதுரையில் கட்டப்புளிநகர் முதல் விமான நிலையம் வரையும், நாகமலை புதுக்கோட்டை முதல் மணலுார் வரையும் இரண்டு வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று பதில் தரப்பட்டுள்ளது.. இது மதுரைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறது..

இதுகுறித்து சிஎம்ஆர்எல் இயக்குநர் சொல்லும்போது, "மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரைஉள்ள வழித்தடம் மட்டுமே ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. ஒரு திட்டம் உருவாக்கும்போது அடுத்த சாத்தியக்கூறுகள் என்ற அடிப்படையில் பிற வழித்தடங்கள் குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்கப்படும். அவ்வகையில் தான் அந்த 2 வழித்தடங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் திட்டம்: திருமங்கலம் - ஒத்தக்கடை வழித்தடம் நிறைவுற்று, திட்டம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு மறுபடியும், இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்யப்படும். அப்போது மேற்கண்ட 2 வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறில் மாற்றம் செய்யப்படும். இப்போதைக்கு 22 இடங்களில் மண் ஆய்வுப் பணிகள் முடிந்து, வழித்தடம் தன்மை குறித்து டிரோன் சர்வே பணிகள் மேற்கொள்வதற்காக அனுமதியையும் கேட்டுள்ளோம்.. அதேபோல, திருமங்கலம் டோல்கேட் முதல் திருநகர் வரை 9 கி.மீ., தூரம் வேன் டிரோன் சர்வே பணியும் நிறைவடைந்துள்ளது என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications