அரசு ஊழியர்களுக்கு பெரிய ட்விஸ்ட்.. இடமாற்றம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு
மதுரை: மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தோட்டக்கலைத்துறையில் உதவி அலுவலராக பணியாற்றும் பலர், உழவர்- அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 அடிப்படையில் வேளாண் துறை பணிக்கு இடமாறுதல் செய்யப்பட்டிருந்தார்கள். இந்த இடமாறுலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அரசு ஊழியர்கள் தங்களுக்கு வசதியான இடத்தில் பணி என்பதை உரிமையாக கோர முடியாது என தீர்ப்பளித்துள்ளது.
அரசு ஊழியர்களை எங்கு பணியமர்த்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது அரசின் நிர்வாக முடிவு மற்றும் கொள்கை முடிவு ஆகும். இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதற்குத் தகுந்தபடி ஆட்களை மாற்றுவது அரசின் உரிமை உள்ளது.

அதேபோல் அரசுப் பணியில் சேரும்போதே, "அரசு இடும் கட்டளைப்படி எங்கு வேண்டுமானாலும் பணியாற்றத் தயார்" என்ற அடிப்படையில்தான் ஊழியர்கள் பணியில் சேருகிறார்கள். எனவே, "எனக்கு இந்த ஊர்தான் வேண்டும், இந்த இடத்தில்தான் வேலை செய்வேன்" என்று பிடிவாதம் பிடிக்க முடியாது. இதனை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தோட்டக்கலைத்துறையில் உதவி அலுவலராக பணியாற்றும் பலர், உழவர்- அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 அடிப்படையில் வேளாண் துறை பணிக்கு இடமாறுதல் செய்யப்பட்டிருந்தார்கள். இந்த இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும், இதுபோன்ற இடமாறுதலுக்கு வழிவகுக்கும் அரசாணைகளை ரத்து செய்யும்படியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவில்- உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என்பது விவசாயிகளுக்கும், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது. உதவி வேளாண்மை அதிகாரிகள் மற்றும் உதவி தோட்டக்கலை அதிகாரிகள் மேற்கொள்ளும் வழக்கமான களப்பயணங்கள் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.
முன்பு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விவசாயிகளை சந்தித்து வந்தனர். இப்பணியை இரு துறை அலுவலர்களும் இணைந்து மேற்கொள்ளும் வகையில் இடமாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே மனுதாரர்கள் அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர். இந்த அச்சம் குறித்து அரசு உத்தரவுகளில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த அரசாணைகளை எதிர்த்து தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இது அரசின் கொள்கை முடிவாகும். அதில் கோர்ட்டு தலையிட முடியாது.
எனவே மனுதாரர்களின் இடமாறுதலை ரத்து செய்ய முடியாது. மனுதாரர்கள் அரசு ஊழியர்கள் என்ற பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அரசு ஊழியர்கள் தங்களுக்கு வசதியான இடத்தில் பணியாற்றுவதை உரிமையாக கோர முடியாது. எனவே இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications