பாரத் விஷயத்தில் பிரதமர் பின்பற்றுவது அண்ணாவின் வழியை! ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம்
மதுரை: 'பாரத்' பெயர் விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், "இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, அண்ணாவின் வழியை பின்பற்றுகிறார்" என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனர் கூறியுள்ளார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி என்கிற பெயரில்தான் அனைத்து கூட்டங்களையும் எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் இந்த 'இந்தியா' எனும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரதம் என்று மாற்ற மத்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கேற்றாற்போல பாஜக தலைவர்கள் பலர், "இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். பாரதம்தான் நமது உண்மையான பெயர்" என்று கூறி வருகின்றனர். இந்த சலசலப்புகள் ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் மற்றொரு பஞ்சாயத்து வெடித்து கிளம்பியிருக்கிறது. அதாவது ஜி20 மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விருந்துக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதில், 'பாரத' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கமாக 'இந்திய' குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இம்முறை பாரதம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, ஏற்கெனவே இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் கருத்தியலுக்கு வலு சேர்ப்பதை போல இந்த நடவடிக்கை இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கையை குறிக்கும் பெயர் பலகையில் 'இந்தியா' என்பதற்கு பதில் 'பாரத்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, அண்ணாவின் வழியை பின்பற்றுவதாக ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "இந்தியா - பாரத் விவகாரத்தில் பிரதமர் மோடி, அண்ணாவின் வழியை பின்பற்றுகிறார் என நினைக்கிறேன். மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என மாற்றியது சரி என்றால், இந்தியாவை 'பாரதம்' என மாற்ற முடிவு செய்வதும் சரியானதுதான்" என்று பேட்டியில் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications