ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அவனியாபுரம் வாடிவாசல்...வரப்போகும் விஐபி..மதுரையில் பலத்த பாதுகாப்பு
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவிற்காக இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாடிவாசல்களை அலங்கரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆளுநர் ஆர்.என் ரவி அவனியாபுரம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு முடிவடைந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டியையொட்டி பாரம்பரியமாக நடக்கும் ஜல்லிக்கட்டு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர் காளைகளும், மாடுபிடி வீரர்களும் மற்றும் பார்வையாளர்களும் தயாராகிவிட்டனர். இதற்காக ஆன்லைன் முன்பதிவு கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும் காளைகளும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர்.
ஜனவரி 15ஆம் தேதி தை பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையொட்டி
ஜல்லிக்கட்டுக்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாடிவாசல், காளைகள், பார்வையாளர்கள் கேலரிகள், விழா மேடை அமைத்தல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. இவற்றை ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மேயர் இந்திராணி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மதுரை மாநகர காவல் துறை ஆணையர் கேஎஸ். நரேந்திரன் நாயர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திடலுக்கு இன்று சென்றார். அவர் விழா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டும், விழா நடக்கும் பகுதியை சுற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி இந்த ஜல்லிக்கட்டு விழாவை காண வரலாம் என்ற தகவல் கசிந்துள்ளது. ஒருவேளை அவர் வந்தால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது. சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலின் இடையேயான மோதலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரைக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும் இரண்டு தவனை தடுப்பூசி கட்டாயம் என்றும் அறிவித்தது. கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே வீரர்கள் போட்டியில் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.
கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் உயிரிழப்புகள் எதுவும் இந்தாண்டு நடைபெறாமல் இருப்பதற்கு அனைத்துத்துறை அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தங்களது உத்தரவில் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து, நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும். ச மாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக்குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.
சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். ஒருவேளை மதுரை அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டுக்குழு அமையப்பெற்று, நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் சில இரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்று காலையில் வாடிவாசல் அருகே ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அவனியாபுரத்தை சேர்ந்த முக்கிய நபர்கள் பங்கேற்றனர். வாடிவாசலை அலங்கரிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications