நிலத்தை வைத்துள்ளோருக்கு ஹேப்பி.. புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வருது.. மதுரை போல பெரம்பலூருக்கும்
மதுரை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழும் மக்களுக்கு, அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசின் சில வரை முறைகளுக்கு உட்பட்டு பட்டா வழங்கிட அறிவுறுத்தியுள்ளார்.. இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற பகுதிகளில் வீட்டு மனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பான பணிகள் நடந்து வருகின்றன. அத்துடன் பயனாளிகளின் வீடுகளுக்கே மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
தமிழகத்தில் நில வரன்முறை நடவடிக்கைகள் அடிப்படையில் பட்டா உரியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த வருடம் 5 லட்சம் பட்டா வழங்கப்படும் என்று கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

வீட்டு மனைப்பட்டா
சொந்த வீடற்ற, நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா தருவதை தமிழக அரசு, தன்னுடைய முன்னுரிமை கொள்கையாகவே வைத்திருப்பதாகவும், அந்தவகையில், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீட்டுமனை பட்டாக்கள், மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது, மேலும், 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்கு பிறகு நடந்த மானிய கோரிக்கை விவாதங்களின்போது பேசியிருந்த வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், "நில வரன்முறை நடவடிக்கைகள் அடிப்படையில், தகுதி வாய்ந்த மக்களுக்கு நிலத்துக்கான பட்டா வழங்கப்படுகின்றன. வெவ்வேறு திட்டங்கள் வாயிலாக, அனைத்து பிரிவு மக்களுக்கும், வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
பட்டா மாறுதல்கள்
அந்த வகையில், இந்த வருடமும் 6.29 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 3.55 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதம் உள்ள பட்டாக்களை மாதத்துக்கு, 50,000 வீதம் டிசம்பருக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன" என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பின் ஒருபகுதியாக, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு சார்பில் பட்டா தயார் செய்யும் பணிகள் ஜரூராக நடந்துவருகின்றன. இதற்காக பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் குறித்து கணக்கெடுத்து தகுதியுள்ளோரை, அதிகாரிகளும் அணுகி வருகிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம்
அந்தவகையில், இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. வடக்கு மாதவி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 11 நபர்களும், எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள 83 நபர்களும், இந்திரா நகர் பகுதியில் 36 நபர்களும் அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதியுடையவர்களா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆவணங்களை பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
மேற்கண்ட பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருந்து வருவதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து ஆய்வுசெய்து, கூரை வீடு மற்றும் ஆஸ்பெட்டாஸ் அட்டை வீடுகளில் வசித்து வரும் நபர்களுக்கு பட்டா வழங்கப் பெற்றதற்கு பிறகு, ஊராட்சியின் மூலமாக கலைஞரின் கனவு இல்லம் அல்லது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து தருமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தினார்.
வீட்டுமனை வரன்முறைப்படுத்தல்
அதுமட்டுமல்ல, கல் உடைக்கும் தொழிலாளர்களிடம் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்டக் கலெக்டர் கேட்டறிந்தார்.. குழந்தைகள் படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருவதால் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வீட்டு மனைப் பட்டா வழங்குவது தொடர்பாக ஆவணங்கள் சரியாக உள்ளவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டுமனை வரன் முறைப்படுத்தி, நகர்ப்புற பகுதிகளில் வீட்டு மனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் விரைவில் பட்டா வழங்கப்படும் என்றும் உறுதி தெரிவித்தார். கலெக்டரின் இந்த அதிரடி ஆய்வு நடவடிக்கையானது, பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications