கரூரில் ஐ.டி அதிகாரிகளை தாக்கியவர்களுக்கு ஜாமீன் ரத்து.. 3 நாட்களில் சரணடைய ஐகோர்ட் கிளை ஆர்டர்!
மதுரை: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்கின் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரித்துறையினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ஜாமீனை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீடு, அலுவலகங்கள், மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சில வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சென்னை, கோவை, கரூர் மாவட்டங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன. கரூரில் சோதனை நடத்த திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறிப்பாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில் சோதனை நடத்தச் சென்ற வருமான வரி அதிகாரிகளை தடுத்து நிறுத்தி திமுகவினர் வாக்குவாதம் செய்தனர். ஐடி கார்டை காட்டும்படி, அவர்கள் வைத்திருந்த பையை திறந்து காட்டும்படியும் கூறினர். அதோடு அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியை உடைத்தனர்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் எஸ்பி அலுவலகம் சென்று தஞ்சமடைந்தனர். அதன்பிறகு போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறை சோதனை நடந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 4 அதிகாிரிகள் காயமடைந்தனர். இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் அளித்த புகாரின் பேரில் கரூர் நகர் காவல் நிலையத்தில் 3, தாந்தோணிமலையில் ஒன்று என 4 வழக்குகள் பதிவாகி இருந்தது.
இந்த சோதனையின் போது வருமான வரி அதிகாரிகளை தாக்கியதாக 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கி கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியவர்கள் மீதான வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் அளித்தது ஏற்புடையதல்ல என்று சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, 19 பேருக்கும் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் ரத்து செய்யப்பட்ட 19 பேரும் 3 நாட்களில் கரூர் நீதிமன்றத்தில் சரண் அடையவும் உத்தரவிட்டுள்ளது ஐகோர்ட் கிளை.
-
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications