மதமாற்றம்! அரியலூர் மாணவி வழக்கில் தமிழ் படத்தை எடுத்துக்காட்டிய நீதிபதி சுவாமிநாதன் -என்ன சொன்னார்?
மதுரை: அரியலூர் மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றிய தீர்ப்பில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தமிழ் திரைப்படம் ஒன்றை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூர் பள்ளி ஒன்றில் படித்து வந்த அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவியின் மரணத்தில் சிபிசிஐடி விசாரணை வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவி படித்த பள்ளியில் ஹாஸ்டல் வார்டன் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை
ஹாஸ்டல் வளாகத்தை சுத்தம் செய்ய சொல்லி ஹாஸ்டல் வார்டன் சகாய மேரி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சகாய மேரி கைது செய்யப்பட்டுவிட்டார். இன்னொரு பக்கம் மாணவியை மத மாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியது. அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன்
இந்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தனது தீர்ப்பில் தமிழ்திரைப்படம் ஒன்றை இன்று எடுத்துக்காட்டினார். அதாவது கிறிஸ்துவ மத மாற்றம் குறித்து குறிப்பிடுவதற்காக நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தமிழ்ப்படம் ஒன்றை எடுத்துக்காட்டாக கூறினார். நீதிபதி தனது தீர்ப்பில், இயக்குனர் பாலசந்தர் இயக்கிய கல்யாண அகதிகள் படத்தில் அம்முலு என்ற இந்து பெண் ராபர்ட் என்ற கிறிஸ்துவ இளைஞரை காதலிப்பார். இரண்டு வீட்டிலும் திருமணம் முடிவு செய்யும் போது ராபர்ட் வீட்டில் அந்த பெண்ணை மதம் மாற சொல்வார்கள்.

மத மாற்றம்
அதற்கு அந்த பெண் மாட்டேன் என்பார். உடனே ராபர்ட்.. உன்னிடம் நாங்கள் வரதட்சணை கேட்கவில்லை. மதம் மட்டும்தானே மாற சொல்கிறோம் என்பார். அதற்கு அந்த பெண் அம்முலு.. இதுவும் ஒரு வகையான வரதட்சணைதான் என்று கூறி மதம் மாற மறுத்து, அந்த பந்தத்தில் இருந்து வெளியே வருவார் என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் குறிப்பிட்டு உள்ளார். அதேபோல் நவாஸுதீன் சித்திக் நடித்த சீரியஸ் மேன் என்ற என்ற தொடரை தீர்ப்பின் இன்னொரு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரியலூர் மாணவி
ஐய்யன் மணி என்ற தமிழ் தலித் கதாபாத்திரத்தில் வரும் நவாஸுதீன் சித்திக் தனது மகனை கிறிஸ்துவ பள்ளி ஒன்றில் படிக்க வைப்பார். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த மாணவனின் அறிவை பார்த்து, அவனுக்கு இலவச கல்வி தருகிறோம், மதம் மாறுங்கள் என்று நவாஸுதீன் சித்திக்கிடம் கூறுவதாக ஒரு காட்சி இருக்கும். இந்த காட்சியையும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video

உண்மையை வெளிப்படுத்துகின்றன
தமிழ் படங்கள் எப்போது மிகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஆனால் சமயங்களில் அந்த படங்களும் கூட உண்மையை வெளிப்படுத்துகின்றன என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மத மாற்றம் குறித்த உண்மையை வெளிப்படுத்துவதாக இந்த காட்சி இருப்பதாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை உயர் நீதிமன்ற கிளை வழங்கி உள்ள தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications