தட்டச்சுத் தேர்வுக்கு இடைக்காலத் தடை! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு! என்ன காரணம்?
மதுரை: தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தட்டச்சு தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என ஆணையிட்ட தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்கம் சார்பில் தட்டச்சு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு, தாள் - 1, தாள் - 2 என இரண்டு நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்தத் தேர்வுகள் கடந்த 75 ஆண்டுகளாக தாள் - 1-ல் ஸ்பீடு தேர்வும், தாள் - 2-ல், ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்பவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும்.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட தட்டச்சு தேர்வு அறிவிப்பானது, இளநிலை மற்றும் முதுநிலை தேர்வில், தாள் -1ல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட்டும், தாள்-2ல், ஸ்பீடும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த முறையை ரத்து செய்துவிட்டு, 75 ஆண்டுகளாக நடைபெறும் முறையில், தாள்-1ல் ஸ்பீட் தேர்வும், தாள்-2ல், ஸ்டேட்மெண்ட் மற்றும் லெட்டர் தேர்வும் நடைபெற உத்தரவிடவேண்டும் என சென்னை மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழ்நாடு தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி பள்ளிகள் சங்கத் தலைவர் சோமசங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தமிழகத்தில் பழைய முறைப்படி தாள்-1ல், ஸ்பீடு தேர்வும், தாள் - 2ல் லெட்டர் மற்றும் ஸ்டேட்மெண்ட் தேர்வும் நடைபெறும் என உத்தரவிட்டார். இதனையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திருச்சி, தட்டச்சு பயிற்சி நிலைய உரிமையாளர் பிரவீன் குமார் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீடு மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தமிழகத்தில் தட்டச்சு தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை, தமிழகத்தில் தட்டச்சு தேர்வு நடத்தக்கூடாது எனவும் கூறி, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications