கோர்ட்டில் கடைசி வரை எதுவுமே சொல்லாமல் மவுனம் சாதித்த சுவாதி..கண்டித்த நீதிபதி..போலீஸ் பாதுகாப்பு
மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவேண்டும். காவல்துறையோ, குற்றவாளிகள் தரப்பிலோ அவரை எந்த வகையிலும் அணுகக்கூடாது எனவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான ஸ்வாதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது கோகுல்ராஜ் உடன் வீடியோவில் உள்ள பெண் நானில்லை என்றும் கூறினார்.
அதைக் கேட்ட நீதிபதிகள் உண்மையை மறைத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவாதியை எச்சரித்தனர். வரும் 30ஆம் தேதி மீண்டும் சுவாதியை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

கோகுல்ராஜ் கொலை
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். வேறு சமூகத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தார் கோகுல்ராஜ். அவருடன் அவரது தோழியும் சென்றிருந்தார். அப்போது சிலர் அந்த பெண்ணை விரட்டி விட்டு கோகுல்ராஜை கடத்தி சென்றனர்.

ஆயுள் தண்டனை
கோகுல்ராஜ் கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில்பாதை அருகே கொலையாகி கிடந்தார். இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை மதுரை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த 2019ல் மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 8ல் தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம், முதல் குற்றவாளியான யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சுவாதி ஆஜர்
இந்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்த 5 பேரின் விடுதலையை ரத்து செய்து, அனைவருக்கும் தண்டனை வழங்கக் கோரி, கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நீதிபதிகளின் உத்தரவுபடி போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.

சத்தியம் செய்த சுவாதி
அப்போது, 'புத்தகம் மற்றும் குழந்தை மீது சத்தியம் செய்து உண்மையை கூறுங்கள்' என நீதிபதிகள் கூறினர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிபதிகள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது. ஞாபகம் இல்லை என்று கூறினார். போலீசார் கூறியதால் சொன்னேன். எழுதிக் கொடுத்தேன்' என்றும் சுவாதி பதிலளித்தார்.

கோகுல்ராஜை பார்க்கவில்லை
சம்பவம் நடந்த அன்று காலையில் கோகுல்ராஜை பார்க்கவில்லை என்று சுவாதி கூறினார். கோகுல்ராஜுடன் பேசுவீர்களா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அதிகமாக பேசுவேன் என்று சுவாதி பதிலளித்தார். அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினர். அந்த வீடியோப் பதிவில் கோகுல்ராஜும், சுவாதியும் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோப்பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்? என்று நீதிபதிகள் கேட்டனர். அது யாரென்று தனக்கு தெரியவில்லை என்று சுவாதி கூறினார். அது யாரென்று சரியாக நினைவில்லையென்றும் தொடர்ந்து கூறினார்.

கண்ணீர் விட்ட சுவாதி
அப்போது நீதிபதிகள், இந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள்தான் ஆகிறது, அந்த சம்பவம் நினைவில் இல்லையா என்றும், வீடியோவில் சல்வார் கமீஸ் அணிந்து வரும் பெண் யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைமுறை கேள்வி கேட்கிறோம் என்றனர். அப்போது நீதிமன்றத்தில் சுவாதி கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டார். அப்போது நீதிபதிகள், "நீங்கள் அழுதாலும் உங்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்கிறோம். எனவே நடந்த உண்மையை கூற வேண்டும்" என்று சுவாதியிடம் கூறினர்.

அது நான் இல்லை
அதற்கு சுவாதி வீடியோவில் உள்ளது கோகுல்ராஜ் தான். ஆனால் அவருடன் செல்லும் பெண் நான் இல்லை என்று கூறினார். அப்போது நீதிபதிகள், ''உங்களை, உங்களுக்கே அடையாளம் தெரியவில்லையா? எதையும் மறைக்காமல் உண்மையை கூற வேண்டும். உண்மைகளை கூறாவிட்டாலும், பொய்யான தகவல்களை கூறினாலும் மீண்டும், மீண்டும் குறுக்கு விசாரணை நடந்து கொண்டே இருக்கும் என்று கூறினர்.

ஆடியோவில் இருப்பது என் குரல் அல்ல
மாஜிஸ்திரேட் முன் நீங்கள் வாக்குமூலம் கொடுத்தீர்களா? கோகுல்ராஜை 23ம் தேதி பார்க்கவில்லை என்றீர்கள். ஆனால், வாக்குமூலத்தில் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்று சுவாதியிடம் கேட்டனர். அதற்கு பதில் சொன்ன சுவாதி, போலீசார் எழுதிக் கொடுத்ததை மாஜிஸ்திரேட்டிடம் கூறினேன்' என்றும் தெரிவித்தார். அப்போது சுவாதி பேசியது தொடர்பான ஆடியோவை போட்டுக் காட்டிய பின்னர் நீதிபதிகள், இந்த ஆடியோவில் உள்ளது யாருடைய குரல் என்றனர்.அதற்கு சுவாதி, நான் பேசவில்லை. அது எனது குரல் அல்ல என்றார். அப்படியானால் உங்களது குரலை பதிவு செய்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டி வரும் என்று கூறினர்.

மயங்கிய சுவாதி
ஒரு கட்டத்தில், உண்மையைக் கூற உங்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறோம். யோசித்து கூறுங்கள் எனக்கூறி நீதிபதிகள் எழுந்து சென்றனர். அப்போது சுவாதி, திடீரென தனக்கு மயக்கம் வருவதாகக் கூறி, சாய்ந்து அமர்ந்தார். இதையடுத்து அவரை, ஐகோர்ட் கிளை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதித்து மருந்துகள் வழங்கப்பட்டன. பின்னர் அவரிடம் விசாரணை தொடர்ந்தது

மன அழுத்தம்
அப்போது நீதிபதிகள், யுவராஜ் யார் என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேட்டனர். இதற்கு, சமீபத்தில் தான் தெரியும். அந்த வழக்கு துவங்கியபோது யார் என்று தெரியாது. அதிக அழுத்தத்தால் பல விஷயங்கள் என் நினைவில் இல்லை என்று கூறினார். அப்போது நீதிபதிகள் உங்களுக்கு அழுத்தம் எங்கிருந்து வந்தது. காவல்துறையிடமிருந்தா? குற்றவாளிகள் தரப்பிலா என்று கேட்டனர். விசாரணையின் போது காவல்துறை சொன்னதை செய்தேன் என்று கூறினார்.

நீதிமன்ற அவமதிப்பு
நீங்கள் உண்மையை மறைத்து, வேண்டுமென்றே கூறுகிறீர்கள். நீதிமன்றத்தை விளையாட்டு மைதானம் என்று நினைக்க வேண்டாம். உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போகிறோம். உண்மையை சொல்லுங்கள் என்றனர். இதற்கு, நான் என்ன அவமதிப்பு செய்தேன் என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள், நீதிமன்றத்தில் உண்மையை மறைப்பதும் அவமதிப்பு தான் என்று கூறினார்.

சத்தியம் செய்து விட்டு பொய் கூறலாமா?
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமானது நியாயம், தர்மம், சத்தியம். சாதியோ, மதமோ அல்ல. உங்கள் புகைப்படத்தைப் பார்த்து யாரென தெரியவில்லை என்கிறீர்கள். எல்லோரையும் முட்டாள் என நினைக்கிறீர்களா? நீதிமன்றம் உங்களிடமிருந்து உண்மையை மட்டுமே எதிர்பார்க்கிறது. வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்? குழந்தை மீது சத்தியம் செய்து விட்டு, உங்களைப் பார்த்து நீங்களே தெரியாது எனக் கூறினால் எப்படி? என்று கேட்டனர்.

மிரட்டுகிறார்களா?
நீதிமன்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் ஒரு பொறியியல் பட்டதாரி. எது சரி, எது தவறு என்பது உங்களுக்குத் தெரியும். கீழமை நீதிமன்றத்தைப் போல இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது. காவல்துறையினர், அரசு வழக்கறிஞர்கள் மிரட்டினார்கள் என்பதைத் தாண்டி, மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்துவிட்டு, இப்போது மிரட்டினார்கள் என்றால் எப்படி? இதையும் தாண்டி உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். உண்மையை கூறினால், ஏதேனும் அழுத்தமோ, பிரச்னையோ ஏற்படுமானால் அதையும் கூறுங்கள் என்று தெரிவித்தனர்.

சுவாதி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
அதற்கு சுவாதி, எனக்கு தெரிந்தவற்றை எல்லாம் கூறிவிட்டேன் என்று கூறினார் இதையடுத்து நீதிபதிகள், சத்தியம் என்றைக்காக இருந்தாலும் சுடும் என்றனர். பின்னர், அந்தப் பெண், அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை தொடர்ந்து வழங்கவேண்டும். காவல்துறையோ, குற்றவாளிகள் தரப்பிலோ அவரை எந்த வகையிலும் அணுகக்கூடாது'' எனக் கூறி விசாரணையை நவ. 30க்கு தள்ளி வைத்தனர். அப்போது ஸ்வாதியை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியின் உத்தரவை அடுத்து சுவாதி வீட்டிற்கும் அவரது பெற்றோர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications