திருச்செந்தூர் குடமுழுக்கு.. தமிழில் வேள்வி நடத்துவது குறித்து பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
மதுரை: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவின்போது தமிழில் வேள்வி நடத்துவது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜூலை 7 ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. தமிழ்க கடவுளான முருகன் கோவிலின் குடமுழுக்கு நிகழ்வை தமிழ் மொழியில் நடத்தக்கோரி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை என்று சுரேஷ்பாபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் மனுதாரர் வேள்வி ஆசிரியராக வேள்வி குண்ட நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் மந்திரம் உச்சரித்து வேள்வி நடத்தக் கோரி இந்து அறநிலையத்துறையிடம் செய்த மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரிய மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்து வரும் ஜூலை 7 ஆம் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மனுதாரர் வேள்வி குண்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிப்பது பற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வரும் காலங்களில் நடக்க இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் கும்பாபிஷேகங்களில் தமிழ் மந்திரம் உச்சரித்து வேள்வி குண்ட நிகழ்வுகள் நடைபெற செயல் திட்டம் வகுக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications