மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை..? 3 துறைகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட் கிளை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மனமகிழ் மன்றங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. உறுப்பினர் அல்லாதவருக்கு எவ்வாறு மது விற்பனை செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வருவாய் துறை, காவல் துறை, மதுவிலக்கு துறை கூட்டாக அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றாகவும், சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றும் இயங்கும் பல மனமகிழ் மன்றங்கள், தங்களது வரம்பை மீறி இரவு நேரங்களிலும், பொதுமக்களுக்குக் கட்டுப்பாடின்றியும் மது விநியோகம் செய்து வருவதாகப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வந்தன.

High Court Questions Liquor Sales to Non-Members Orders Joint Report on Recreation Clubs

இந்த வழக்குகளை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரித்தது. இந்த விசாரணையின் போது, மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

மனமகிழ் மன்றங்களின் விதிகளின்படி, அங்கு பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், உறுப்பினர் அல்லாத பொதுமக்களுக்கு எவ்வாறு சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் உரிமம் பெற்றுவிட்டு, அங்கு சட்டம் குறிப்பிடும் எவ்வித விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு அம்சங்களும் இன்றி, அவை வெறும் நாள் முழுதும் செயல்படும் மதுக்கடைகளாகவே நடத்தப்பட்டு வருவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

வருவாய்த் துறை, காவல் துறை, மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகிய மூன்று துறைகளின் அதிகாரிகளும் இணைந்து, மாநிலம் முழுவதும் செயல்படும் மனமகிழ் மன்றங்களில் நேரடி ஆய்வு நடத்த வேண்டும். ஆய்வு அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் கூட்டு அறிக்கையாக உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

விதிமுறைகளை மீறி, உறுப்பினர் அல்லாத வெளிநபர்களுக்கு மது விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றங்களின் எஃப்.எல்-2 உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+