மதுரை விமான நிலையத்துக்கு பிறந்தது விடியல்.. பல வருட கனவு நிறைவேறுது.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு வசிக்கும் சின்ன உடைப்புப் பகுதியைச் சேர்ந்த மக்கள் 2 வார காலத்திற்குள் வெளியேற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது ஏற்கனவே 2008-ல் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது 64 பயனாளிகளுக்குக் கருணை அடிப்படையில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே உயர்நீதிமன்றம் மக்களைவெளியேற உத்தரவிட்டது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவதற்காகவும், அதன் ஓடுபாதையை விரிவாக்கம் செய்யவும் சுமார் 633.17 ஏக்கர் முதல் 653.35 ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்த மத்திய அரசுதிட்டமிட்டது.இதற்காக இந்திய விமான நிலைய ஆணைய மொத்தம் 653.35 ஏக்கர் நிலம் தேவை எனக் கோரியது.

மதுரை விமான நிலைய விரிவாக்கம்
இதுவரை தமிழக அரசு சுமார் 543.41 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. இன்னும் சுமார் 109.94 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி இறுதிக்கட்டத்தில் இருந்தது. குறிப்பாக, சின்ன உடைப்பு போன்ற கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சட்டச் சிக்கல்கள் இருந்தது.நேற்றைய நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளன.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
முன்னதாக மதுரை அவனியாபுரம் சின்ன உடைப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரா உள்ளிட்ட 130 பேர் கடந்த 2024ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், " எங்கள் பகுதியில் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான இழப்பீடும் வழங்கினார்கள். ஆனால் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு நடவடிக்கையை எடுப்பது அரசின் கடமை.
இதற்காக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இதற்கிடையே எங்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எங்களுக்கு மறுவாழ்வு, மறுகுடியமர்வு வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
சின்ன உடைப்பு கிராம மக்கள்
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சின்ன உடைப்பு மக்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்தது. ஆனால் 2008ம் ஆண்டிலேயே விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக தொடங்கி பயனாளிகளுக்கு இழப்பீடு உள்ளிட்டவை வழங்கப்பட்டவிட்டன. தற்போது 64 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையில் வீட்டுமனைகள் வழங்கி அதில் வீடுகள் கட்டித்தரப்படும் என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வீட்டு மனைகள்
இந்நிலையில் நேற்று வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 2008-ம் ஆண்டிலேயே நிலத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கி, பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது 64 பயனாளிகளுக்குக் கருணை அடிப்படையில் மாற்று வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்களை வெளியேற்றலாம்
எனவே, மக்கள் 2 வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், ஏற்கனவே அரசு உறுதி அளித்தபடி தலா 2 சென்ட் வீட்டுமனை பெறுவதற்கு மக்கள் கலெக்டரிடம் மனு அளிக்கலாம் என்றும், அதன் அடிப்படையில் உரிய நிதி ஒதுக்கீடு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
பிச்சை எடுத்த காசில்.. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.6 கோடி வழங்கிய.. மதுரை யாசகர்! சுவாரசிய தகவல் -
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications